Monthly Archives: November 2010

“ஓடை” கவிதைக்கு விளக்கம்.

அருஞ்சொற்பொருள் மேல் இடுகையில் உள்ள ஓடை என்னும் கவிதைக்கு விளக்கம். (டென்னிசனின் ஆங்கிலக் கவிதையை ஒட்டியது ) பணிவான : மெல்ல அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஓடை, தனக்குப் பணிவு காட்டுகதாகக் கூறுவது கற்பனை பைய நீ கடலுக்கு ஏகு= மெதுவாக நீ கடலுக்குச் செல்க; அணி குளிர் ஒடை = அழகிய குளிரோடையே! நல்லோடை = … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஓடை

பணிவான அலைகள் கண்டேன் பாய்ந்துநீ கடலுக் கேகு! அணிகுளிர்  ஓடை உன்றன் அடிகளைத் தொடர்தல் இல்லேன். மெல்லநீ  ஒழுகு  வைக்கோல் மேடுகள் திடல்கள் தாண்டி நல்லோடை, பிறகோர் ஆறாய்; நாடிப்பின் வருவேன் அல்லேன்! கரையோர மரம்க லங்கும்! காணும்வெண் தளிர லங்கும்! முரலும்வண் டுன்ம ருங்கில், முன்செல்க தொடர்தல் இல்லேன். ஆயிரம் ஒளிபாய் எல்லோன்; ஆயிரம் … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

why failed?

இந்து சமயம் தழைத்த பெருநாடாய் இந்துத் திருநேய இந்துநேசி யாவிருந்தே எந்தவோர் காரணத்தால் இன்றிங்ஙன் மாறிற்றோ? சொந்தமாய்ச் சிந்திப்போம் நாம்! வேதம் புராணம் விழையும் இதிகாசம் யாது நமக்கில்லை யாம்கவல—ஓதுமெல்லாம் இந்துக்கள் பாலிருந்தும் ஏனிழப்பு விட்டெறிந்த பந்தொக்கப் பின் தொக்க தேன்?

Posted in Uncategorized | Tagged | Leave a comment

In praise of poem on Nandan & Panan

{This was written in praise of poems written by a forumer “Sudhama” in forumhub.} கவலைஒன் றில்லை நெஞ்சில் கடவுளை கடைந்து கண்டால், தவலையுள்* தயிரை மத்தால் தவறாமல் ஆய்ச்சி போலே; துவளுறும் துன்ப வாழ்வில் துறக்கமே காணும் பாதை சவளறத் தந்த ஐயர் சாந்துணை ஏத்தத் தக்கார். அன்றுள நந்தன் … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

puja

சமஸ்கிருதம், ஓர் இந்தோ ஐரோப்பிய மொழி என்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். எனவே. ஒரு சொல் சமஸ்கிருதம் என்று சொல்வதென்றால், அச்சொல்லுக்கு இனமான சொற்கள், அவஸ்தான், தொடக்கம் ஏனை இந்தோ ( செர்மானிய) ஐரோப்பிய மொழிகளில் இருக்கவேண்டும் . ஏராளமான திராவிட மொழிச்சொற்களும் இந்தோ ஐரோப்பியத்தில் உள்ளன. தமிழ் முதலான திராவிட மொழிகளில் இருந்து குறிப்பிட்ட … Continue reading

Posted in etymology | Leave a comment

Chinese words and Tamil [notes]

சீனமொழி எங்கே? தமிழ் எங்கே? இந்தியாவின் தென்கோடியில் வாழ்பவர் தமிழர். வாழிட வெம்மையின் காரணமாய், கரு நிறம் அடைந்தவர். சீனர், வெண்மஞ்சள் நிறமுடையோர். பல ஆயிரம் கல்தொலைவுகட்கு அப்பால் வாழ்பவர். இவர்கள் எங்கும் அடுத்தடுத்து வாழ்ந்ததாக வரலாறு கூட இல்லை. இவர்கள் ஒன்றாக இருந்து உணவருந்துவதையோ, திருமணவாழ்வில் ஈடுபடுவதையோ, மலேசியாவில்தானே காணமுடிகிறது? இதை நீங்கள் உரத்த … Continue reading

Posted in etymology | Leave a comment

(kal)= stone, compare with Chinese words

கல் > கல்லு. (தமிழ்) க (பச்சைக்கல்) (stone ) (சீன) லி – (சிறுகல்/ விலைமதிப்புள்ளகல்) ஒப்பிடுக: கல் > கல்லு > லு > லி. லியு = லி (சீன) சிறுகல். லு (சீன)= (பொருள்) எழுது தமிழ்ச் சொல்லமைப்பு:- இல் > இலு > இழு > இழுது > … Continue reading

Posted in etymology | Leave a comment

Sinnasamy, Kumarasamy – Sanskrit connection

Q:மேலும்… சின்னசாமி என்னும் பெயர் குமாரசுவாமி என்னும் பெயரின் கிராமிய பேச்சு வழக்கில் ஏற்பட்ட திரிபாகவும் இருக்கலாம் என்ற ……… A:குமரா என்ற சங்கதச் சொல்லை கு+மரா என்று அம்மொழி வல்லுநர் பிரிக்கிறார்கள். எளிதில் இறப்பது என்பது சொல்லாக்கப் பொருளாம். இந்தச் சொல்லினின்று முருகனின் பெயர் அமைந்ததாகக் கொள்வதற்கு என்ன பொருத்தம் என்பதை நீங்கள் எடுத்துச் … Continue reading

Posted in etymology | Leave a comment

தீபவொளிப் புனலில்

ஒளிருங்கள் இப்புவியில் தமிழைப் பாடி உயருங்கள் எத்தடையும் உலகில் ஏது? மலருங்கள் நெஞ்சமதே! மனைகள் எல்லாம் மகிழட்டும் தீபவொளிப் புனலில் மாந்தி! கிளருங்கள் மாவினொடு சருக்க   ரைநெய்! கிளைஞருடன் நண்பர்களும் களிப்பில் தம்கை உலர்வின்றி ஒருநூறு பலகா  ரம்வைத்(து) உண்டாடிக் கொண்டாடும் உணர்வு காண்பீர். . மாந்துதல் = களித்தல். கை உலர்வின்றி = கை … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

தீப ஒளி Deepavali greetings

சுகமே சுகமென்று சும்மாவும் அயர்ந்திடாமல் அகமே மகிழென்று  அன்றுபோல் இன்றுமென்றும் முகமே நகுமாறு முத்தமிழால் சரம்தொடுத்து உகமே மிகுதீப ஒளிகூரக் கவிபடைப்பீர். நகுமாறு – நகைதவழுமாறு.  உகமே =உலகமே. தீபஒளித் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும்.

Posted in MY POEMS | Leave a comment