Monthly Archives: July 2008

விலைவாசி

மாட்டையே மாற்றிவண்டி மாட்டிச்சேர் எந்திரத்தால்நாட்டையே நாகரிகம் நன்றூக்கி —- மேட்டிற்போய்கீழே உருட்டிவிட்ட கேடுகா ரெண்ணெய்தான்பாழும் மலையேறி னால். குறிப்பு: "மலையேறுதல்" என்பது "கடந்துபோதல்’ "இல்லாமல்போதல்" போன்ற பொருளில் வழங்கும்; எ-டு: "சும்மா கிடைத்த காலம் மலையேறிவிட்டது" என்றால் "இப்போது சும்மா கிடைப்பதில்லை" என்று பொருள்படும். ஆனால் இங்கு சற்று வேறுபட்ட பொருளில் அதை வழங்கியுள்ளது புரிந்திருக்கும். … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

மட்டை வருத்தம்

கமுக மரத்தோப்பில் காலார்ந்த போதில்"எமைப்பாரீர்" ் என்றன மட்டை — "சுமையோநாம்?இன்னூண் பொதிவார் நெகிழிக்குள் எம்மையேமண்ணில் மடிந்திட விட்டு!" காலார்ந்த = மன நிறைவுடன் நடந்து சென்ற; இன்னூண் = இனிய உணவு; நெகிழி – பிளாஸ்டிக்.கமுகு = "பாக்கு"ுமரம். கமுகங்காய்கள் வெட்டப்பட்ட பின் பாக்கு ஆகிறது. பகு > பாக்கு. ( பகுக்கப்பட்டது).

Posted in MY POEMS | Leave a comment

புதியவருக்குய வர்வேற்பு

புதியவருக்குய வர்வேற்பு பாய்ந்திவண் வந்தார் பரிவுடன் வருகவேஆய்ந்துயர் நற்றமிழ் அறிவு பெருகிடதோய்ந்து களத்தினில் தோமறு காட்சியில்ஓய்ந்தி டாஅலை போலும் எழுகவே! தோமறு – களங்கம்/குற்றம் அற்ற.

Posted in MY POEMS | Leave a comment

சில வெண்பாக்கள்

அப்படி என்றால் அழகுதொரன் றோவிலேஎப்பொருளும் கிட்டுமோ எண்மையாய் — செப்படிவித்தைதான் யாதோ விலையேறா மைக்கென்றேமெத்தமகிழ் வோடுரைப் பீர். குறிப்புகள்: எண்மை – எளிமை.‘விலையேறா மைக்கென்றே’ – இதை "விலையேறாத் தன்மைக்கே" என்று மாற்றுக : இப்படிச் செய்தால் வகையுளி தேவையில்லை. எண்ணெய் : இதை எண்ணை என்பர் பேச்சுவழக்கில். இப்படியே (எண்ணை என்று) தாளிகைகள் சிலவும் … Continue reading

Posted in MY POEMS | Leave a comment