Monthly Archives: July 2021

[அங்கு  +  ஈ(ர்) + கு + ஆர் +ஆம்] அங்கீகாரம்

 அங்கீகாரம் என்ற சொல்லுக்கு முன்பு யாம் கருத்துவெளியிட்டதும் உண்டு; எழுதியதும் உண்டு.  இங்குத் தேடியதில்,  அதைக் காணவில்லை.  அஃது அழிந்துபோயிருக்கலாம்;  அல்லது வேறு எங்காவது அதை யாம் எழுதியிருந்திருக்கலாம்.  அதைத் தேடி நேரத்தை வீண்செய்யாமல், இப்போது ஆய்வு விவரங்களைச் சுருக்கமாக எழுதிவிடலாமே என்று எண்ணுகிறோம்.  இதை மறந்ததில்லை.  காரணம், இச்சொல் எளிமையான உட்பகவுகளைக் கொண்ட ஒன்று … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

திவ்வியம் – சொல்

இன்று திவ்வியம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம். திருவெல்லாம் திரண்டு புனிதமாகிவிட்ட திருவடிகள் இறைவனுடையவை. திருவெல்லாம் அங்கு இயல்கின்றது, இயங்குகின்றது, திகழ்கின்றது. திருவென்பதோ எண்ணிக்கைக்கு இயலாத துய்யதான திரட்சி ஆகும். மற்றும் திருவென்ற சொல், இவ்வுலகத்துச் செல்வங்களையும் மொத்தமாய்க் குறிக்குமொரு சொல். இதனின்று சொல்லாய்வில் கல்லி எடுக்கும் அடிச்சொல் திர் என்பது. இவ்வடிச்சொல் தனித்தியக்கம் அற்றதொன்றாம். ஏனெனில் … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

தங்குமிடத்து அழகு வருணனை (கவிதை)

நீரோட்டம் மருவிமகிழ் பேராற்றின் கரைபாதி ஊறாத தரைதன்னில் நேருயர்ந்த நெடுங்கோட்டை. 1 பேராறு – பெரிய ஆறு. ஊறாத தரை – ஆற்றுநீர் புகாத தரை. முன்மாந்தர் முடித்துவிட்ட மண்காணாச் சாளரங்கள்! தண்காற்று நாள்முழுதும்! வெண்ணீரில் இரவிமுகமே. 2 முன்மாந்தர்- பழங்கல ஆட்சியாளர்கள். தண் – குளிர்ந்த மண்காணா – நீரைமட்டுமே காணக்கூடிய சாளரங்கள் – … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

NIGHT SHIFT DOGGY

 இந்தச் சிறிய நாய்,  இரவெல்லாம் வீட்டுக்குள் சுற்றி சுற்றி வந்துவிட்டு,  காலை வந்தவுடன் களைத்துப் போய்ப் படுத்து உறங்கிவிடுமாம்.  வீட்டில் யாராவது இரவில் எழுந்தால் உடனே அருகில் வந்துவிடுமாம்.  பகலில் வீட்டிலிருப்பவர்கள் அங்குமிங்கும் நடமாடுவதை அது கண்டுகொள்வதே இல்லையாம்.  ( சாப்பாட்டு நேரம் தவிர ) எப்போதும் இரவுநேர வேலையிலே ஈடுபடுவதால், இந்த நாய்க்குட்டிக்குப் பெயர் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மழையும் நின்மலனும்

மழைத்தூர்ந்து நெருங்கிய மால்நிறத்தின்  முகிற்கூட்டம் இழைத்தார்ந்த இடுவிரை வாலெடுத்தேன்  உலராடைகள் நனைத்தோய்ந்து செலுமுகில் நான்படுவேன்  அதற்கென்ன நினைத்தோய்ந்து நிலைகொள வைத்தனைநீ    நின்மலனே. இதன் பொருள் மழைத்து  ஊர்ந்து —  மழை வருவதுபோல் சுற்றுச்சார்புகள் குளிர்ந்து, நெருங்கிய மால் நிறத்தின் –  வானில் கிட்ட வந்த  கருநிற முடைய; முகிற்கூட்டம் —  மேகப்  பெருந்திரள்கள்; இழைத்து … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மாலும் மாரியும்

 திருமாலும் மாரியம்மனும் தெய்வங்களாக வழிபடப் படுபவை. இந்த இடுகையில் இவர்களிடையே உள்ள சொல்லமைப்புத் தொடர்பினை ஆய்வினுக்கு எடுத்துக்கொள்வோம்.  தொன்ம வரலாற்றில் இவர்களுக்கிடையில் உறவுமுறைகள் உள்ளன.  அவற்றை விரித்துரைக்கும் நூல்களும் இடுகைகளும் இணையத்திற் கிட்டுவன ஆதலின் ஈண்டு நாம் அவற்றினை எடுத்துரைத்தலில் ஈடுபடுதல் வேண்டாதது  ஆகும். மால் என்பது திருமாலைக் குறிக்கும்.  இவர் பலரால் விரும்பிப் போற்றப்படும் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தாமரையும் முண்டகமும்

 தாமரை என்பது ஒரு பெரிய பூவாகும்.  இன்னும் சிறிய பூக்களெல்லாம் பூவிதங்களில் அடங்குகின்றன என்பது நீங்கள் அறிந்தது. தாமரை ஒரு பனித்துறை மாமலர் என்று நம் சங்க இலக்கியம் கூறுகிறது.  ஆனால் தாமரைக்கு அப்பெயர் வந்ததற்கு என்ன காரணம் தெரிகிறதா?  அது நீருடன் தாழ்ந்து, நீரை மருவிக்கொண்டு நின்று அழகு காட்டுகிறது. தாழ்+ மரு+ ஐ … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

சமணர் என்ற சொல்.

ஜெய்ன் என்பது ஒரு பழைய சொல்லென்று தெரிகிறது. இது ஜி என்ற சமஸ்கிருதச் சொல்லினின்று வருவதாகச் சொல்வதுண்டு. ஜி என்பதும் ஜெய் என்பதன் திரிபு என்பர். உடலிலும் இவ்வுலகிலும் எழும் விலக்கத்தக்க உணர்வுகள் செயல்கள் பலவற்றை வெற்றிகொள்ளுதலை இது குறிக்கிறதென்பர்.  எனவே ஜெய்ன் என்றால் வெற்றி என்பது. இதை இங்கு ஆய்வு செய்ய முற்படவில்லை. அமணரை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

எலும்பின் பொருத்து – குழைச்சு

 குழைதல் என்பது சோறு பருப்பு போலும் பொருட்கள் சமைக்கப்பட்டு மென்மையாதலை குறிக்கிறதென்பது நாம் அறிந்ததே.   ஆனால் இதனுடன் தொடர்புடைய குழுவுதல் என்ற சொல்லுக்கு: கூடுதல், சேர்தல், கலத்தல் முதலிய பொருள்கள் உள்ளன.  இவ்விரண்டு ( குழை, குழுவு ) வினைச்சொற்களும் பிறப்பியல் தொடர்புடையன என்பது விளக்கமின்றியே பலருக்குப் புரியக்கூடியதாம். குழைச்சு என்ற சொல் எலும்பின் பொருத்தைக் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment