படைஞர்கட்கு  உத்தரவிடும் கட்டளைகள்

சொற்கள் சில, மிக்கச் சுருக்கமாக விளக்க இடந்தரும் உருவுடையனவாம்.

ஆங்கிலத்தில் , நேராகவும் நிமிர்ந்தும் நிற்குமாறு படைஞர்கட்கு உத்தரவிடும் முகத்தான், “அட்டென்ஷன்” என்று கட்டளைதருவர். மலாய் மொழியில் “சிடியா” என்று கத்தல் எழும். ஒவ்வொரு தேயத்தும் இத்தகு கட்டளைச் சொற்கள் உள்ளன. இராசராசனின் படையினர் எத்தகு கட்டளைகளைப் பிறப்பித்துப் படைநடத்தினர் என்பதைக் கூறும் நூல் எதையும் யாரும் இதுகாறும் வெளியிட்டிலர் என்பது அறிகிறோம்.

எழுதுவதில் தமிழர் நல்லபடி செய்கின்றனர், எழுதியவற்றைப் படிப்பதில் தமிழர் முன்னணியில் இல்லை என்பது எம் கருத்து ஆகும். இரண்டும் சமமாக நடைபெறுதல் நன்று.

பழங்காலத்தில் படைஞனின் கவனத்தை ஈர்க்க ” பார் ஆக்கு” என்று குரலெழுப்பினர்.

பார் – பார்வை; ஆக்கு — கவனமுடன் நிற்பாய் என்பது. இது அரசர் காலத்தில் வழங்கியதாகத் தெரிகிறது.

ஆங்கிலத் தொடர்கள், பாராக்கு என்பதன் மொழிபெயர்ப்பு. இது போன்ற கட்டளைகள், நீட்டி இழுத்து வெட்டுப்பட்டதுபோல் ஒலிக்கும்படி விடுக்கப்படுதல் வேண்டும். ப….ரா………க் என்பதுபோல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

Posted in Uncategorized | Leave a comment

பைண்ட் என்ற ஆங்கிலச் சொல்.

 தமிழ்ச்சொற்கள்  அதனோடுகூடச் சங்கதச் சொற்களும் ஐரோப்பிய மொழியில் பலவாறு கலந்துள்ளன என்பதையும்,  தமிழ்ப் புலவர்கள் உரோமபுரிக்கு அழைத்துச் சொல்லப்பட்டு அவர்கள் அளித்த பல்வேறு சொற்கள் எப்படி தெரிவுசெய்துகொள்ளப்பட்டன என்பதையும் அறிந்துகொண்டால்,  தமிழ் உலக மொழிகட்கு எவ்வாறு ஊட்டம் கொடுத்துள்ளது என்பதை அறிந்து இன்புறலாம்.

சென்னைப் பல்கலைக் கழக  வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் இதிலீடுபட்டு உழைத்துள்ளார் என்பதை,  மயிலை சீனி வேங்கடசாமி தம் நூலில் நினைவுபடுத்தியுள்ளார்.  இஃது முன் எவராலும் கண்டுபிடிக்கப்படாத வரலாறு அன்று.

இரண்டாயிரமாம் ஆண்டு வாக்கில்தமிழ்ச்சொற்களின்  ஒரு பெரிய பட்டியலே இணையத்தில் கிடைத்தது.  இப்போது அது மறைந்த இடம் தெரியவில்லை. இதுபோன்ற வரலாறுகளை பகர்ப்புச் செய்து சேமித்து வைப்பது உதவக்கூடியது ஆகும்.  ஒருவர் கண்டுபிடித்தது காணாமற் போகாமலிருப்பது முதன்மையன்றோ?

நாம் கருதுவதற்குரியது “பெந்த்”  என்ற  இந்தோ ஐரோப்பிய அடிச்சொல் ஆகும். இதனின்றே  பைண்ட் என்பது வருகிறது.

கட்டுதல் என்பது ஒன்று மற்றொன்றைப் பற்றிக்கொண்டிருக்கச் செய்வதே. பற்று என்பது அதுவன்றி வேறில்லை.

பல் > பன்  ( லகரனகரத் திரிபு  ,  அல்லது போலி).

பன் + து > பந்து.  ( பந்து என்ற கயிற்றினால் உண்டையாகக் கட்டப்பெற்றது).

பந்து   பந்தம்  –  உறவுக் கட்டு.

முன் – முந்து,  பின்- பிந்து என்பவற்றில் இத்தகைய புணர்ச்சித் திரிபுகள வரல் கண்டுகொள்க.

ஆகவே,  பந்து, >  பைண்ட் என்பதன் திரிபையும் பொருளணிமையையும் கண்டுகொள்க. 

 அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

Posted in Uncategorized | Leave a comment

தீபாவளி வாழ்த்துக்கள்

எல்லா அன்பு நேயர்க’ளுக்கும் யாம் சொல்வோம்

இன்பத் தீபஒளி இனிய வாழ்த்துக்கள்.

உலகப் போர்வரும் என்றுநாம் அஞ்சினுமே

நிலையில் நின்றிட்ட அமைதிக்கு மகிழ்வோமே.

தொற்றுகள் மிக்குவந்து தோழர்பலர் சென்றிடினும்

பற்றுடனே பல்லோர் நல்வாழ்வு தாம்கண்டார்.

இசையொடு கூத்தியலும் இன்னுமுள பல்கலைகள்

பசைபட்டு மக்களிடை பயின்றன ஓர்மகிழ்ச்சி.

உடல்நலத் துறையிலும் ஊறிவளர் பல்துயர்கள்

கடலென விரியினுமே காணாமல் தொலைந்தனவாம்.

இன்னபல இன்னிகழ்வும் இனிதுநம்முன் இட்டுவைத்து

கண்ணில்பலன் காட்டிய தீபஒளிக்கே மகிழ்ந்தோம்.

பலகாரம் பலரோடும் நல்லுணவு விளைவுகளால்

நலம்தந்த தீபஒளி வரவேற்றோம் வரவேற்றோம்

இறைவற்கு நன்றிசொல்லி இன்பத் தீபாவளியை

கரைகடந்த மகிழ்வுடனே கால்மாற்றி ஆடிமகிழ்.

பெரியவர் பிள்ளையரும் பெருமகிழ்வு மேம்படவே

அரிய இந்த நன்னாளில் ஆடியாடி நீமகிழ்வாய்.

வளம்தரும் தீப ஒளி வாடாத நன்மலராம்

களம்வென்ற களிப்பினிலே களைப்பற்றோய் ஆடிமகிழ்.

நேயர் அனைவருக்கும் தீபஒளி வாழ்த்துகளே

ஆயும்நற் றமிழால் ஆடியாடிப் பேருவகை.

வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.

Posted in Uncategorized | Leave a comment

மடம் என்னும் சொல்

கேட்டல் என்பதற்கு இரு பொருள்: 1  வினாவுதல் (கேள்வி கேட்டல்),  செவி மடுத்தல் (  சொன்னது அல்லது ஒலி காதுக்கு எட்டுதல் ).

மடுப்பு  ( மடு-த்தல் வினையினின்றும் அமைந்த சொல்),  மடிப்பு என்றும் பொருள்படும். இது யாழ்ப்பாண வழக்கு  ஆகும்.  ஆகவே, மடி-த்தல்,  மடு-த்தல் என்பவற்றிடை மயக்கம் எனலாம்.

மடு என்பது பள்ளமான இடம் என்றும் பொருள் படும்:  ” மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு”  என்ற வழக்கில் இது காணலாம்.

மடு – நீர்நிலை என்பதுமாம்.

மடுத்தல் – உண்ணுதல். நிறைத்தல்,  சேர்த்தல்,  ஊடுசெல்லுதல், பரவுதல் என்பனவும் இச்சொல்லால் தெரிவிக்கலாம்.    செவிமடுத்தல் என்பது செவியிற் சென்று அடைதல் என்று பொருள்கொள்ளவேண்டும்.

இங்கு இச்சொல்லின் எல்லாப் பொருள்களையும் முற்ற விளக்கவில்லை. சில விடப்பட்டன.  மடம் என்னும் சொல்விளக்கமே நோக்கம் ஆகும்.

மடங்கள் உண்டாக்கப்பட்ட போது,  அவை  நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்க்கவும்  மக்களும் தங்களை மடத்திடைக் கொண்டுசேர்த்து பெறற்குரிய செய்திகள் முதலியன பெற்றுக்கொள்ளவும்  ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. மேட்டு நீர் பள்ளத்தில் ஓடிச் சேர்தல் போலும்  ஓர் விழைநிகழ்வு கருதியே அவை அமைந்தன. மடுத்தல் உண்ணலும் ஆதலின் அங்கு உணவு உண்ணுதலும் நடைபெற்றது.  செவி மடுத்தற்கும் செய்தி கிட்டிற்று. இவ்வாறு பல வகைகளில் மடுத்தல் நடைபெற்றது என்பதுணர்க.

மடு + அம் –   மடம் ஆயிற்று.

மொழிவரலாற்றில் அகர வருக்கச் சொற்கள் வளர்ச்சி பெற்று உயிர்மெய் முதலாய் ஆயின,  ஆதலின்  அடு> மடு என்பதுணர்க.

இந்த அணுக்கம், செவிமடுத்தல் என்பதில் இன்னும் உள்ளது.  செவியை அடுத்த செய்தியே செவி மடுத்த செய்தியும் ஆகும்.

எமக்கு அப்புலவரிடத்தே ஒரு மடுவுண்டாகிவிட்டது என்றால்,  நீர் பள்ளத்தினுள் செல்லுமாறுபோல,  ஓர் ஈர்ப்பு உண்டாயிற்று என்பது பொருள்.  மனம் இடுகின்ற இடத்தில்தான் மடு.  இடு> இடு+அம் > இட்டம்,  இடு> ஈடு ( முதனிலைத் திரிபுச்சொல்.  ஈடு> ஈடுபடு > ஈடுபாடு. இவ்வாறு உணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

Posted in Uncategorized | Leave a comment

முடியுடை யாதவர்

 யாதவர் என்னும் சொல், முல்லை நில மக்களைக் குறிக்கும். வேறு தொழில்கள் எவற்றையும் மேவாத நிலையில்,  பெரும்பாலும் கால்நடைகளை இவர்கள் வளர்த்து,  அவற்றின் பால் தயிர் முதலியவற்றை விற்று  ஓகோவென்று வாழ்ந்தனர்.  இவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நிலையில்,  மாடு என்ற சொல்லுக்கே  செல்வம் என்ற பொருள் ஏற்படலாயிற்று.

மேலே சொல்லப்பட்டவை தமிழ் ஆர்வலர்கள் யாவரும் நன்கறிந்தவையே.

யாம் சொல்லவிழைந்தது பின்வரும் இரட்டுறலே ஆகும்:

முடியாதவர்  –  இது எதுவும் செய்ய இயலாமல் ஒருவேளை உடற்குறையும் உள்ளவர்  என்னும் பொருள்.

முடி+ யாதவர்:  அதாவது மன்னனாய் முடிசூட்டிக்கொண்டவர்(கள்).  மணிமுடி தரித்தவர்கள்.  ஆனால் யாதவ குலத்தினர் என்பதுதான்.

முடியுடைமை என்பது கண்ணபிரானால் மெய்ப்பிக்கப்பட்டது.  மாடு என்னும் விலங்கு, என்றும் மனிதருடன் சேர்ந்திருந்து,  பால் முதலியன மனிதர்க்குத் தந்து, அவர்தம் வாழ்வினை மேம்படுத்தியது. அதன் வாழ்விடமும் மனிதர்தம் வீட்டின் அருகிலே இருக்கும். மடுத்தல் – சேர்ந்திருத்தல். மடு என்ற வினைச்சொல், முதனிலை “ம” நீண்டு, மாடு என்று தொழிற்பெயராகும்.  அதாவது ஒரு வினைச்சொல்லிலிருந்து பிறந்த பெயர்ச்சொல்.  இஃது படு என்ற வினையினின்று பாடு என்ற வினைப்பெயர் அமைந்தது போலாகும். மா என்பது பெரிது என்ற பொருளையும்,  அம்மா என்ற சொல்லின் இறுதியையும் குறிக்கும்.  அதன் ஒலியும் அம்மா, மா என்றே வருகிறது.  இது பல் பொருத்தம் உடையது ஆகும்.  மா என்பது மனிதனிலிருந்து விலகி நிற்றலை உடையதாயினும்  மடு> மாடு எனச் சேர்ந்திருத்தலையும் உடையது. செல்வமும் ஆகும் என்பது உணர்க.  தான் புல்லை மட்டும் உண்டாலும் மனிதனுக்குச் செல்வமனைத்தும் தந்தது மாடு.  இஃது அளப்பரிய ஈகையாகும்

யாதவர் பற்றி மேலும் அறிய:  https://sivamaalaa.blogspot.com/2019/11/blog-post_23.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

Posted in Uncategorized | Leave a comment

நோன்புப் பெருநாள் வாழ்த்து.

கொய்யும்நல் எண்ணமுடன் கூடிவாழ் திண்ணமுடன்

எய்யும்வாழ் விங்கே இனிமைகொள் —— பெய்விரிய,

நோன்புப் பெருநாள் நுழையுமுசு லீம்நண்பர்

வான்சொரி வண்ணருள்காண் பார்.

யாமறிந்த நண்பர் திருமதி சையதும் குடும்பமும்

கொண்டாடிக் கொண்டுள்ளனர். அவர்கட்கும் வாழ்த்துக்கள்.

எய்யும் – குறிக்கோளுடன் அணுகு(தல்)

Posted in Uncategorized | Leave a comment

ஆ என்னும் முன்சொல்லும் ஆயிரமும்

ஆ என்று மனிதன் வாய்பிளந்து நோக்கும் பல பொருள்களும் உண்மையில் மிக்க விரிவுடையனவே.  இதனை மெல்லச் சிந்தித்து   ஓய்வாக இருந்து எண்ணி அறிந்தாலே  முடியும்.  எம் பரிந்துரை யாதெனின்  பெரிதும் தனியாய் இருந்து சிந்திக்க வேண்டும்.  தோன்றும் கருத்துக்களைப் படம்பிடிப்பதுபோல் எழுதி வைத்துக்கொண்டு சிந்தித்து முடிவு செய்யவேண்டும்..  

காயம் என்ற சொல் தொல்காப்பியர் கால முதல்கொண்டே தமிழில் உள்ளது.  காயம் என்றால்,  சூரியன்,  நிலா,  உடுக்கள் முதலியவை ” காயும் இடம்.  அதன் விரிவை உணர்த்த,   அது பின்  ஆகாயம் என்று விரிக்கப்பட்டது.   ஆ + காயம் > ஆகாயம் என்பதுதான் சொல்.   ஆஹாய, என்பதில்லை.  ஆஹாய என்பது திரிபு  ஆகும்.

மேல் விரிந்த வானமான இடத்துக்கு   ஆ+ காய என்று பெயர் அமைந்தது போலவே,  கடலுக்கும்   ஆழி   என்று பெயர் வந்தது.    ஆ>  ஆழ் > ஆழ்தல் என்ற வினைச்சொல் தமிழில் மிக்க இயற்கையாக அமைந்த சொல்..

ஆயிரம் என்ற சொல்லைப் பண்டைத் தமிழர்கள் எப்படி அறிந்தனர் அல்லது அமைத்துக்கொண்டனர்?

தாமே அமைத்தற்குத் திறமோ அறிவோ முயற்சியோ இல்லாதவிடத்து, அல்லது அமைத்துப் பயனோ பயன்படு தருணங்களோ இல்லாதவிடத்து, அல்லது குழப்பம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுமிடத்து அமைக்கமாட்டார்கள். அங்கனம் இல்லையாயின் அமைத்திருப்பர்.

காட்டிலோ, கரையிலோ காலங்கழித்துக்கொண்டிருந்த முந்தியல் மாந்தனுக்கு, ஆயிரமென்பது ஒரு பெருந்தொகையே. பத்தும் நூறும் அறிந்தபின்பே அவன் ஆயிரத்தை எட்டமுடியும்.

ஒன்றை அறிந்து பழகியபின் இரண்டு அறிந்தகாலை அவன் அதைப் பெரிது என்று கருதினான். இரு என்ற சொல்லுக்கு இன்னும் பெரிது என்ற பொருள் தமிழில் இருக்கிறது.

இம்மாம்பெரிது  என்று கூறுகையில்  “ஈ”  வந்துவிடுகிறது..  இரு என்பது பெரிது என்று பொருள் தந்ததில் என்ன வியப்பு?  

ஒன்பதின் பின் பத்து என்பது பலவாகத் தெரிந்தது. அங்கனமே பொருள்படுஞ் சொல்லை அவன் அதற்கு ஏற்படுத்தினான்.

ஆயிரமென்பது ஆகப் பெரிதாகத் தோன்றிய எண்.
ஆ = வியப்பும் குறிக்கும் சொல். ஆக என்பது இறுதியும் குறிக்கும்.
இரு= பெரியது.
அம் : விகுதி.
இச்சொல்லின் பொருளும் “ ஆகப் பெரிது” என்பதுதான்.
ஆ+ இரு + அம் = ஆயிரம்.
ஆ என்று வியத்தகு பெரிதாய ஓர் எண்.
இலக்கம் கோடி என்பன கண்டகாலை, ஆயிரம் சிறிதாகிவிட்டது.

Posted in Uncategorized | Leave a comment

விஜயன் விசையன் விசை

 இன்று “விசையன்”  என்ற சொல்லைக் கவனிக்குமுன்,  விசை என்ற சொல்லையும் கவனித்து,  தொடர்புடைய சில அலசியறிவோம்.

விரிதற் குறிக்கும் சொல்லே பின் விசை என்றுமானது.   மனிதனின் அறிவே விரிவடைந்து,   தானியங்கியாக இடப்பெயர்ச்சி செய்யுமளவுக்கு உலகின்கண் மாறியுள்ளது. உயர்ந்த நிலப்பகுதியினின்று தாழ்வான பகுதிக்கு ஒன்றை உருட்டிவிட்டால்,  மனித ஆற்றலுடன் புவியின் ஈர்ப்பாற்றலும் இணைந்து உருட்டிவிட்ட பொருள் ஓடுகின்றது. உருளும் பொருட்கு ஊட்டப்பெற்ற விசை தீருமளவு ஓடிப் பின் அது நின்று போகிறது.  இனியும் தூண்டினாலன்றி அது மேலியக்கம்  பெறுவதில்லை.

விர் என்பதை இப்போது அடிச்சொல்லாக வைத்துப் பிற அறிந்துகொள்வோம்.

விர் > விய்.   இது கர் > கை என்பதுபோன்றது.

அடிப்படைக் கருத்து விர் > விரிவு என்பதே.  

விர் > விய்   விய் > வியன். (விரிவு).

விய் + ஐ > வியை  (விரிவு).

வியை >  விசை.  

முதன்முதல் மனிதன் கண்டுகொண்ட விசை,  கையின் அசைவினால் உண்டாக்கிய விசைதான்.  விசை என்பதற்கு அடிப்படைப் பொருண்மை விரிவு என்பதுதான்.  ஓர் உந்துவண்டியைப்பார்த்தாலும்,  அது அவன் கையாற்றலின் விரிவுதான்.  முன் கையினால் சுற்றிக்கொண்டிருந்திருக்கலாம்.  பின்னர், சுற்றிக்கொண்டிருந்தால் அயர்ந்துவிடுவானாதலின்,  தான் சுற்றவேன்டியதின்றித் தானே அது  சுற்றும்படி ஏற்பாடு செய்துகொண்டான்.. இதன்மூலம் அவனுக்கு வேண்டிய ஓய்தல் கிட்டிற்று.

சோம்பலினால் விரிவு உண்டானமை போலவே, உழைப்பாலும் விரிவு ஏற்பட்டது. இப்போது விரிய உழைத்துப் பின் ஓய்வு கொள்ளலாம் ( சோம்பல்)  என்பதாக இருக்கும்.  ஓய்வு சோம்பலன்று,  ஆனால் சோம்பலில் ஒருசார் ஒற்றுமை உள்ளது. இரண்டிலும் இயக்கமின்மை உள்ளது.

விசை என்ற இயங்காற்றல் குறிக்கும் சொல்,  விரிவு என்று பொருள்பட்டதே.

உலகில் அரைத்தானியக்கமாகவும் முழுத் தானியக்கமு  மாகவும் காணப்படுவன அனைத்துப் பொருளும் கையாற்றலின் விரிவு என்பதே  ஆகும்.

கைப்பொருள்கள் விரிவு பட்டன என்பதன்றி,  பிறவும் விரிவு அடைந்தன.  மனிதன் தானுமே இவ்வாறு விரிவு கொண்டான்.  இவ்விரிவுகளிலெல்லாம் விரிவின் தன்மைகள் வேறுபடலாம்.  ஆனால் விரிவினைச் சிந்தித்து அறியவேண்டும்.

மனிதன் தானும் இவ்வாறு விரிந்துகொண்டான்.  அவன் ஆட்சி,  அரசு, ஆதிக்கம் என எல்லாமும் விரிந்தன.  அவன் நடையும் இயக்கமும் ஆற்றலும் விரிவு எய்தின.

இருப்பது எதுவும் இடம்கொண்டு விரியும்.  இவ்விரிவு பக்கவாட்டில் விரிதலும் நெட்டுவாக்கில் விரிதலும்  மேனோக்கி விரிதலும்  யாவும் இதனில் அடங்கும்.

விசை>  விசையன் > விசயன்>  விஜய.  ( விரிந்தோன்).

விசை:  இது ஆற்றலின் விரிவு.

இதில் “ஜ”  என்பது வெறும் மெருகூட்டலே.  உயர்த்தி, உசத்தி, ஒஸ்தி  ஆனதுபோல் மெருகுச்சொல்.  இதில் “வடவெழுத்து” என்பதைக் களைந்துவிட்டால் அது (மீதமுள்ள)  எழுத்தொடு புணர்ந்த சொல்லாகிவிடும். (தொல்.)

விஜயன் தன் ஆதிக்கத்தை விரித்துக்கொண்டோன்.

ஆறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

Posted in Uncategorized | Leave a comment

பத்துமினி, பச்சிமுத்து, பச்சிமம் – பிறவும்.

 பத்துமினி (பத்மினி)பச்சை மின்னி குன்றுதல்

பத்துமினி  ( பத்மினி என்பது )  இன்னொரு வகையிலும் விளக்கமுறும் சொல். இதனை இப்போது பார்ப்போம்.

பச்சை+ மின்+ இ  >  பச்சு+ மினி ,

இது சகர தகர போலியின் காரணமாக:

பத்து + மினி >  பத்துமினி > பத்மினி ஆகிவிவிடும்.

பத்-மினி என்று வெட்டுப்படுத்திச் சொல்வது அயல்பேச்சு முறை. 

இனி மினி என்பது காண்போம்:

மின் + இ >  மின்னி >  மினி ( இது இடைக்குறை. ன் குன்றியது).

ஆக இதன் பொருள் பசுமையுடன் மின்னும் ஒன்று.  அதாவது பச்சை ஒளி வீசி மின்னுவது.

பச்சை என்பது வேற்றுக்கலப்பு இல்லாத இளநிலையைக் குறிக்கும். 

இன்னொரு வகை என்று கூறினோம். முன் விளக்கிய முறை இங்கு உள்ளது. அதையும் வாசித்து மகிழுங்கள்.

பற்றுதல் பத்துமினி

பச்சை என்ற சொல் குறுகிய இடங்கள்

இனிப் பச்சை எனற்பாலது பச்சு என்று திரிதலுக்கு எடுத்துக்காட்டு:

பச்சையுடம்பு  >  பச்சுடம்பு.

பச்சை இரும்பு  >  பச்சிரும்பு

யாப்பியலில் தொல்காப்பிய மாமுனியால் கூறப்பட்ட ஐகாகரக் குறுக்கம் பேச்சிலும் சொல்லாக்கத்திலும் பரவிப் புதுமை விளைத்துள்ளமையையே இது தெளிவாகக் காட்டுகிறது.

பச்சிமகாண்டம்.

முற்பட்டுப் பிறந்தவர்கள் “கிழவன்-கிழவிகள்” ஆகிவிடுவார்கள். தற்போது தோன்றியது இன்னும் பச்சையாகவே இருக்கும்.  இதன் காரணமாக பச்சை+இம்+ அம் என்ற துணுக்குகள் கலந்து,  பச்சிமம் என்ற சொல் உண்டாயிற்று..  இது கம்பன் காலத்திலே வழக்குக்கு  வந்தது.  விவிலிய நூலில் புதிய ஏற்பாட்டுக்கு:  பச்சிமகாண்டம் என்ற சொல் தமிழில் ஏற்பட்டது.  ஆனால் இன்று கிறித்துவத் திருச்சபைகட்குச் சொல்வோருக்கு இது மறதியாகி இருக்கலாம்.  பழைய வரலாறு யூதமதத்து வரலாறு.Old Testament.   புதிய ஏற்பாடு: New Testament.  பச்சிமம் New.

இது ஆட்பெயரிலும் திரிந்து வழங்கும். எ-டு:

பச்சை முத்து >  பச்சிமுத்து.  இளையமுத்துஎன்பது பொருள்.

(  இது பட்சி முத்து என்பதன் திரிபு அன்று).

இன்னும் பல. பின் காண்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.

Posted in etymology | Leave a comment

சிருஷ்டித்தல் சொல்

இப்போது சிருஷ்டித்தல் எனப்படும் சொல் எங்ஙனம் புனைவுற்றது என்பதை ஆராயலாம்.

அகர வருக்கச் சொற்கள் பல சகர வருக்கமுதலாகின என்பதை முன்னர் பல இடுகைகளின் மூலம் உணர்த்தியுள்ளோம்.

எடுத்துக்காட்டாக :

அமண் >  சமண். அமணர் > சமணர்.

அடை > சடை.

தலைமயிர் அடர்வாகக் கட்டப்பட்டுத் தொங்குவது சடை.

அடு > அடை;; அடு>  அடர். இவற்றைப் பொருளுணர்ந்து கொள்க.

இடையில் ஒரு மெய்யெழுத்துப் பெற்று நீளுதலும் சொல்லாக்கத்தில் உளது.

அடு>  அண்டு,  அண்டு> அண்டை. அண்டை .  சண்டை.

உடலை அடுத்து அணியப்படுவது அடு> சடு > சட்டை.

அடுத்துச் சென்று விளையாடுவது சடுகுடு.

இப்படியே சென்றுகொண்டிருக்கலாம். ஆனால் நாம் இதுகாறும் கூறினவற்றை வைத்துச் சிருஷ்டி என்ற சொல்லின் ஆக்கத்தைப் புரிந்துகொள்வோம்.

சிருஷ்டி என்பதன் தலைச்சொல் சிரு. இதைப் பின்னோக்கினால் இரு என்பதாகும்.

ஆக. இரு> சிரு.

இனி ஷ்டி என்பதை ஆய்வுசெய்யலாம்.

உள் + து என்பது உள்ளது என்பதன் குறுக்கம்.

கணித்தல் என்பதில் இகரம் வந்து வினையாதல் போல,

(கண்+ இ )  உள்+ து என்பதுடன் ஓர் இ சேர்க்கப்படும்.

உள்+து+இ.  இதன் பொருள் உள்ளதாக்கு என்பதாகும்.

இவற்றைப் புணர்த்த உட்டி என்றாகும்.

ஏற்கனவே கிடைத்த இரு என்பதுடன் உட்டி என்பதை இணைக்க.

இரு > சிரு.

சிரு + உட்டி  =  சிருட்டி.

இரண்டு உகரங்கள் தேவையில்லை. ஒன்று போதும். மற்றது களையப்படும்.

பொருள்:  உள்ளிருக்கும்படி செய்தல். உண்டாக்குதல். பொதுவாகத் தோற்றுவித்தல்.

இதை மென்மையாக்கி மெருகூட்ட,  ஒரு ஷ் போடவேண்டியது.

சிருட்டி > சிருஷ்டி > சிருஷ்டித்தல்.

உளதாக்கி உடனே மறைந்துவிடாமல் இருக்கச் செய்தலே சிருஷ்டித்தல். அல்லது சிருட்டித்தல்.

இது உண்டானது இப்படித்தான். எம்மொழியாயினும் வாழ்க.

Posted in etymology | Leave a comment