Monthly Archives: October 2008

ஒரு தோட்டத்துப் பூ

ஒரு தோட்டத்துப் பூ. தோட்டத்தில் மலர்ந்திருந்தேன் தொட்டிட வந்தாய் தோழி காற்றென அசைத்தாள் என்னைக் காத்தனள் கொஞ்சநேரம்; ஆட்டமோ என்னைக்கண்டே அசையாதே என்றவாறு பூட்டினாய் விரல்கள் என்மேல்; பூவெனைப் பறித்தேவிட்டாய்! வருடினாய் விருப்பம்போலே வகைகெட மாட்டிக்கொண்டேன் நெருடினாய் நிமிர்த்திமோந்து நேர்ஒரே முத்தம்தந்தாய்! குருடனே என்றேவையக் கொதித்திட வலிமையில்லை. மருள்தரக் கசக்கிப்பின்னே மாய்ந்திடக் களைந்திடாதே!

Posted in MY POEMS | Leave a comment

உலவத் துணை

உலவத் துணை இனிய தென்றல் வீசி எனைத் தாலாட்டுதே… என் தனிமை இன்பத்திற்கு அது ஒரு மெருகூட்டுதே. காணும் அழகு அனைத்தையும் நான் ஒருத்தியே சுவைத்து நின்றேன் சூடும் குளிரும் மலையும் கடலும் எதனிலும் மனமே நிலைத்து நின்றேன். அன்னை இயற்கையின் அழகினில் களித்திட இன்னொரு துணையும் வேண்டுவதோ? என் தனிமைக் கோட்டினைத் தாண்டுவதோ! துணையும் … Continue reading

Posted in MY POEMS | Leave a comment