Monthly Archives: January 2007

இட்டம், கட்டம், நட்டம்

இடு > இட்டம் ( மனத்தை ஒன்றில் இடுவது), கடு >கட்டம் (கடினமான நிலை) hardship,  நடு > நட்டம் (sunk into the ground and unable to surface) என்பன போன்ற விளக்கங்களை மாசிலாமணி  முன்பு தந்திருந்தார். காந்திவாண்டையாரும் அதையொட்டியே கூறியிருந்தார். (both from forumhub). குடு > குட்டை; குடு> குட்டம்: … Continue reading

Posted in etymology | Leave a comment

ரத்து, ரம்பம், ரொட்டி, ரீதி, விவாகம்.

ரத்து, ரம்பம், ரொட்டி, ரீதி, விவாகம். இறு > இறு+து > இறத்து > ரத்து. (இறுதியாக்கப்பட்டது).அறு > அறு+அம் +பு+அம் > அறம்பம் > ரம்பம்.ஊறு+ஒட்டி> உறொட்டி > ரொட்டி. (மாவை ஊறவைத்து, அனலடுப்பில் ஒட்டவைத்துச் சுடப்படுவது.)இரு+தி > இருதி > ரீதி, ( இருக்கும்படியான தோரணை).வி = விருப்பு. விதப்பு. விழைவு முதலியவற்றின் … Continue reading

Posted in etymology | Leave a comment

உலாவம் > லாவம்

தமிழில் காலாடுதல் என்றால் செல்வச்செழிப்பில் திரிந்து இன்புறுதல் என்று பொருள். "காலாடு போதில் கழிகிளைஞர் வானத்து" என்ற பழம்பாடலடியில் இப்பொருளைக் காணலாம், அதேபோல், "உலாவல்" என்றாலும் செல்வச்செழிப்பில் உலாவருதல் என்று அணியியல்முறையில் குறிப்பதாகும்.பணம்கூடிப்போய் உலாத்திக்கொள்கிறாள் என்றும் செல்வதுண்டு. வெற்றி உலாவந்த மன்னர்கள் பெரும்பாலும் பிறமன்னர்களின் செல்வங்களைப் போரிட்டு வென்று கொண்டுவந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு ஏற்றமான அந்நிலையில் … Continue reading

Posted in etymology | Leave a comment

அன்ன வயல்புதுமை ஆண்டாள்

அன்ன வயல்புதுமை ஆண்டாள் அரங்கற்குப்பன்னு திருப்பாவை திருப்பதிகம் — இன்னிசையால்பாடிக் கொடுத்தாணற் பாமாலை பூமாலைசூடிக் கொடுத்தாளைச் சொல். –உய்யக்கொண்டார் உய்யக்கொண்டார் பாடலுக்கு சொற்பொருளுரை. அன்ன =உணவூட்டும்; வயல் = வயல்கள் நிறைந்த; புதுவை = வில்லிபுத்தூரில் வாழும்; ஆண்டாள் = ஆண்டாளம்மை ; அரங்கற்கு = அரங்கநாதற்கு; பன்னு= அருளிச்செய்த; திருப்பாவைப் பல்பதிகம் = திருப்பாவையாகிய … Continue reading

Posted in Tamil Lit | Leave a comment

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவைபாடி அருளவல்ல பல்வளையாய் — நாடிநீவேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்நாம்கடவா வண்ணமே நல்கு. — உய்யக்கொண்டார் பாடல். மேல் தரப்பட்டுள்ள பாடலின் பொருள்: சூடி = பூக்களையணிந்து; கொடுத்த = பின் அவற்றை இறைவனுக்கு அணிவித்த; சுடர்க்கொடியே = மனத்தாலும் உடலாலும் எழுச்சிபெற்ற கொடிபோலும் பெண்ணே; தொல்பாவை = மிக்கப் பழங்காலத்திலிருந்து … Continue reading

Posted in Tamil Lit | Leave a comment

சன்னல். சாளரம்

சன்னல் சாளரம் ் சன்னல் என்பது துளை என்று பொருள்படும் சொல். (சல் >) சன். இதன் அடிவேர்ச் சுல். அது திரிந்து பல சொற்கள் ஏற்பட்டன எனக்கூறுவர். சுல் > சுர் > சுரி = துளை.சுல்>சூல்>சூன்றல்= தோண்டுதல்.சுல் > சூல் = கருப்பம். (கருப்பை உள்ளீடு).சுல் > சூலுதல் = கருக்கொள்ளுதல்.சுல் > … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வேட்டி. சேலை.

சமத்கிருதம் என்பது ஒரு தனிமொழி அன்று. தமிழும் ஈரானிய முந்தை மொழிகளும் கீழைநாட்டு மொழிகளும் ஆகியவற்றில் உருவாக்கப்பட்ட ஒரு கலவை மொழி. அது தமிழுக்குப் பிற்பட்டது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தனர் என்ற கொள்கையை இப்போது இந்திய வரலாற்றாசிரியர்கள் மறுதலிப்பதால், — ஆரியர் என்றொரு சாதியில்லை என்று கூறுவதால் – – சங்கதம் இங்கு தென்னாட்டில் உருவாக்கப்பெற்ற … Continue reading

Posted in etymology | Leave a comment

இடைஇடைப்பே ரிடர்கள்

எந்தஉயிர் ஆயினும்தன் சொந்தஉயிர் என்றே இரக்கமுடன் போற்றுகின்ற உருக்கமுளான் தமிழன்; மந்தமிலாப் பெருவாழ்வில் மகிழ்வுபெறல் இன்றி மடைதிறந்த தன்மைபோல் இடைஇடைப்பே ரிடர்கள் செந்தமிழர் தமக்குவந்து சேர்ந்ததுதான் என்ன? சிந்தனையில் ஆழ்கையிலே சிதைந்திடுமே நெஞ்சம்! வந்தவர்க்கு வழங்குகின்ற வள்ளலுக்கு வந்த வான் துயர்கள் ஏனெனநாம் காண்பதுவும் வேண்டும்.

Posted in MY POEMS | Leave a comment

காதலர் வாழ்விலே

குலைந்த காதலுக்குக்கூறிடும் கவிதை: காதலர் வாழ்விலே கணையாகச் சென்றுமோதலை விளைத்துமுனைந்து பிரித்தது, யாதென அறியோம்மதமோ? மொழியோ?வேதனை அடைந்தவர்க்குஆறுதல் கூறுவோம் மணத்தில் முடிந்தால்மனம்போல் வாழ்வு!மனத்தைத் தேற்றிமறுவாழ்வு தேடினும்சினத்தின் பயனாய்ச்சிக்குண்டு சிதறிகணத்தில் பிரிந்தால்கசப்புதான் மிஞ்சும்! ஆடும் ஊஞ்சலில்அறுந்த கயிறுபோல்,ஓடம் கவிழ்ந்துஆற்றில் முழுகியேதேடிக் கரைசேர்ந்திளைத்தோர் போலகூடும் இருமனம்குலைவது துயரே. வேதம் விளக்குவார்வினையே என்பார்;சோதிடர் திடமாய்ச்சொல்வது கோள்களை!காதலர் கடிவதோஒருவர் மற்றவரை!யாதெனத் தெரிக்கயானறி … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

கலாநிதி பாலசிங்கனாருக்கு அஞ்சலி

கலாநிதி பாலசிங்கனாருக்கு அஞ்சலி. இன்பத்தமிழருக்கே — ஓர்இல்லம் இருந்திட ஈழம் விழைந்தனை! துன்பம் பலதுளைத்தும் — யாம்தோற்பதில் லைவர லாற்றிலென் றோங்கியே மன்பதை உய்கவென — காலைமாலை இரவெனப் பாரா துழைத்திட்ட முன்புல வீரனென்றால் — பாலசிங்கனன்றி வேறு தங்கமுண்டோ சொல்க ! (இன்பத்) 2தள்ளா அகவையிலும் — ஆய்ந்துதந்த உரைகளும் ஒன்றிரண் டல்லவே, முள்ளாய் … Continue reading

Posted in MY POEMS | Leave a comment