பைண்ட் என்ற ஆங்கிலச் சொல்.

 தமிழ்ச்சொற்கள்  அதனோடுகூடச் சங்கதச் சொற்களும் ஐரோப்பிய மொழியில் பலவாறு கலந்துள்ளன என்பதையும்,  தமிழ்ப் புலவர்கள் உரோமபுரிக்கு அழைத்துச் சொல்லப்பட்டு அவர்கள் அளித்த பல்வேறு சொற்கள் எப்படி தெரிவுசெய்துகொள்ளப்பட்டன என்பதையும் அறிந்துகொண்டால்,  தமிழ் உலக மொழிகட்கு எவ்வாறு ஊட்டம் கொடுத்துள்ளது என்பதை அறிந்து இன்புறலாம்.

சென்னைப் பல்கலைக் கழக  வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் இதிலீடுபட்டு உழைத்துள்ளார் என்பதை,  மயிலை சீனி வேங்கடசாமி தம் நூலில் நினைவுபடுத்தியுள்ளார்.  இஃது முன் எவராலும் கண்டுபிடிக்கப்படாத வரலாறு அன்று.

இரண்டாயிரமாம் ஆண்டு வாக்கில்தமிழ்ச்சொற்களின்  ஒரு பெரிய பட்டியலே இணையத்தில் கிடைத்தது.  இப்போது அது மறைந்த இடம் தெரியவில்லை. இதுபோன்ற வரலாறுகளை பகர்ப்புச் செய்து சேமித்து வைப்பது உதவக்கூடியது ஆகும்.  ஒருவர் கண்டுபிடித்தது காணாமற் போகாமலிருப்பது முதன்மையன்றோ?

நாம் கருதுவதற்குரியது “பெந்த்”  என்ற  இந்தோ ஐரோப்பிய அடிச்சொல் ஆகும். இதனின்றே  பைண்ட் என்பது வருகிறது.

கட்டுதல் என்பது ஒன்று மற்றொன்றைப் பற்றிக்கொண்டிருக்கச் செய்வதே. பற்று என்பது அதுவன்றி வேறில்லை.

பல் > பன்  ( லகரனகரத் திரிபு  ,  அல்லது போலி).

பன் + து > பந்து.  ( பந்து என்ற கயிற்றினால் உண்டையாகக் கட்டப்பெற்றது).

பந்து   பந்தம்  –  உறவுக் கட்டு.

முன் – முந்து,  பின்- பிந்து என்பவற்றில் இத்தகைய புணர்ச்சித் திரிபுகள வரல் கண்டுகொள்க.

ஆகவே,  பந்து, >  பைண்ட் என்பதன் திரிபையும் பொருளணிமையையும் கண்டுகொள்க. 

 அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.