Monthly Archives: November 2011

நாளெல்லாம் தூறிற்று

நாளெல்லாம் தூறிற்று  மழையே–நிலம் நன்கு குளிர்ந்தது  மெல் லிழையே!– காலை வேளையில் வந்துண்ணும் புறவும்  — உண்ண வேண்டாமோ அதற்குள் ஏனிந்த இரவே! தொடங்கிய நேரத்தி லிருந்தே– கொஞ்சம் தூறித் தெளித்தபின் நீர்க்கொடையே– குன்றி அடங்கிடில் போதாதோ தொடியே –இதில் ஆடாதோ மகிழ்வுடன் அரும்படர் கொடியே.

Posted in MY POEMS | Leave a comment

ஒருநாள் மழை

ஒருவருடம் ஓடி ஒருநாள் மழையால் திருவருடும் தேடிவந் தாங்கு.

Posted in MY POEMS | Leave a comment

நேற்றுவர நினைப்பிலையோ ஏன்குயிலே

வீற்றிருக்கும் குயிலொன்று மரக்கிளையில் வீசுகின்ற தென்றலதைத் தாலாட்டும்! காற்றினிலே மிதந்துவரும் துகள்கள்தம்மை கௌவியெடுத் தவற்றையின்று கவிசெய்து நாற்றிசையும் ஒலித்திடவே செயும்விந்தை நான்கண்டு வியந்திட்டேன் தேனினையே ஊற்றியது போலினிமை செவிகளிலே நேற்றுவர நினைப்பிலையோ ஏன்குயிலே

Posted in MY POEMS | Leave a comment

problems

ஒரு தோழிக்கு ஆலோசனை. இரவும் பகலுமே மாறிவந் தாலும் இடர்கள் சிலருக்கு மாறாதவை! உறவும் பகையும் உதயம் உறுவதும் ஓரிடம் என்பதும் உண்டல்லவோ! இரவென்ன எல்லோன் பகலென்ன எல்லாம் இனியென்ன என்றே தொடர்ந்திடுவாய் மறைவென்ன மற்றும் குறைவென்ன யாவும் மனம்நினைத் தாலன்றி ஒன்றுமில்லை.

Posted in MY POEMS | Tagged | Leave a comment