Category Archives: Tamil Lit

இந்திரவணக்கம்

தமிழ்நாட்டில் முற்காலத்தில் இந்திரவிழா மன்னர்களால் எடுக்கப்பட்டு மக்களிடையே பெருவரவேற்பைப் பெற்றிருந்தது என்று தெரிகிறது. சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல்கள் தம் கதை நெறியில் இந்திரவிழாவைத் தொட்டுச்செல்கின்றன. பழங்காலத்தில் பல இறைவணக்க நெறிகள் இருந்தன. சிவன் , காளி, இராமன்,  கண்ணன், இந்திரன் என்போர் இந்நெறிகளைத் தோற்றுவித்தவர்களாக நாம் கருத இடமுள்ளது. மக்களிடையே இவர்கள் பற்றிய வரலாறுகள் … Continue reading

Posted in Tamil Lit, Uncategorized | Tagged | Leave a comment

ஐயப்பனும் அம்மா அப்பா சண்டையும்

ஐயப்பனும் அம்மா அப்பா சண்டையும் அந்த வீட்டு அம்மா ஆண்டு தவறாமல் ஐயப்ப மலைக்குப் போய் அவரைத் தெரிசனம் செய்துவிட்டுத்தான் வாழ்க்கையின் மற்ற அலுவல்களைத் தொடர்வார். அந்த வீட்டு ஐயா மூச்சுத் திணறல் (ஆஸ்துமா) நோயாளி, வயது ஆகிவிட்டாலும் ஒரு கிட்டங்கியில்   (godown) காவலாளியாக இன்னும் வேலைபார்த்துக்கொண்டு செலவுக்குக் கொஞ்சம் காசு சம்பாதித்துக்கொள்பவர், அவர் … Continue reading

Posted in short stories/narratives, Uncategorized | 1 Comment

மலர்மிசை ஏகினான்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.  கடம்ப மலர் அமர் செல்வன். முருகன் கடம்ப மலரில் அமர்ந்தவன் என்னும் பொருளில் பரிபாடலிலும் (“கடம்பமர் செல்வன்”) பொருநராற்றுப் படையிலும் (“கடம்பமர் நெடுவேள்”) என்று வருவதனால்., அவன் “மலர்மிசை ஏகினான்” என்று திருக்குறளில் குறிக்கப்படுகின்றான் என்பது ஒப்பு நோக்கின் தெளிவாகிறது. அமர்ந்தான் எனில் அது மேலிருந்தான் … Continue reading

Posted in Tamil Lit | Leave a comment

உண்மை அறிவு

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும். உண்மை அறிவு = சுபாவம் என்கிறார் கண்ணதாசன். உண்மை அறிவு = இயற்கை அறிவு. மிகும் = மேற்படும். இது வீரராகவன் உரை. (காஞ்சீபுரம், 1935). நவசக்தி இதழில், திரு வி.க அவர்கள் பாராட்டிய உரை.  

Posted in Tamil Lit | Leave a comment

அடக்கம் kuRaL

முந்து கிளத்தல் நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. (715) முதுவர் = இங்கு மூத்தோர் கூடியிருக்கும் அவை. அறிவிலும் கல்வியிலும் அகவையிலும்(வயதிலும்) நம்மிலும் மிகவும் உயர்ந்தோரை இங்ஙனம் குறிப்பிடுகின்றார் வள்ளுவர். முதுவருள் = அத்தகையோர் கூடியிருக்கும் அவையில். முந்து கிளத்தல் = முந்திக்கொண்டு பேசுதல். எதையும் அமைதியாகக் கேட்டு ஆழ்ந்து சிந்தித்து … Continue reading

Posted in Tamil Lit, Uncategorized | Leave a comment

சங்ககாலம்:

சங்ககாலம்: "அந்தணர் நூுற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்." குறள் 543 செல்வி சீ. காமாட்சி என்னும்்த ஆய்வாளர் (Selvi.Kamatchi Sinivasan,) " இங்கு அச்சொல் (அந்தணர) பிரமாணரைக் குறிப்பதாகக் கொள்வதே பொருந்தும்." என்று கருத்துரை வழங்கியுள்ளார். இ·து இவர்தம் சொந்தக் கருத்து. ஒரு நூலைப்படித்துவிட்டு யாரும் கருத்துக்கூறலாம். மேலும் "அப்படிக் கொள்வதே பொருந்தும்" என்று … Continue reading

Posted in Tamil Lit | Leave a comment

அன்ன வயல்புதுமை ஆண்டாள்

அன்ன வயல்புதுமை ஆண்டாள் அரங்கற்குப்பன்னு திருப்பாவை திருப்பதிகம் — இன்னிசையால்பாடிக் கொடுத்தாணற் பாமாலை பூமாலைசூடிக் கொடுத்தாளைச் சொல். –உய்யக்கொண்டார் உய்யக்கொண்டார் பாடலுக்கு சொற்பொருளுரை. அன்ன =உணவூட்டும்; வயல் = வயல்கள் நிறைந்த; புதுவை = வில்லிபுத்தூரில் வாழும்; ஆண்டாள் = ஆண்டாளம்மை ; அரங்கற்கு = அரங்கநாதற்கு; பன்னு= அருளிச்செய்த; திருப்பாவைப் பல்பதிகம் = திருப்பாவையாகிய … Continue reading

Posted in Tamil Lit | Leave a comment

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவைபாடி அருளவல்ல பல்வளையாய் — நாடிநீவேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்நாம்கடவா வண்ணமே நல்கு. — உய்யக்கொண்டார் பாடல். மேல் தரப்பட்டுள்ள பாடலின் பொருள்: சூடி = பூக்களையணிந்து; கொடுத்த = பின் அவற்றை இறைவனுக்கு அணிவித்த; சுடர்க்கொடியே = மனத்தாலும் உடலாலும் எழுச்சிபெற்ற கொடிபோலும் பெண்ணே; தொல்பாவை = மிக்கப் பழங்காலத்திலிருந்து … Continue reading

Posted in Tamil Lit | Leave a comment