இந்திரவணக்கம்

தமிழ்நாட்டில் முற்காலத்தில் இந்திரவிழா மன்னர்களால் எடுக்கப்பட்டு மக்களிடையே பெருவரவேற்பைப் பெற்றிருந்தது என்று தெரிகிறது. சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல்கள் தம் கதை நெறியில் இந்திரவிழாவைத் தொட்டுச்செல்கின்றன.

பழங்காலத்தில் பல இறைவணக்க நெறிகள் இருந்தன. சிவன் , காளி, இராமன்,  கண்ணன், இந்திரன் என்போர் இந்நெறிகளைத் தோற்றுவித்தவர்களாக நாம் கருத இடமுள்ளது. மக்களிடையே இவர்கள் பற்றிய வரலாறுகள் கதைகள் முதலியன பரவிப் புலவர்கள் இவைகளைப் பாடிக் காவியங்கள் புனைந்து இவர்களை மக்கள் நெஞ்சங்களில் உயர்த்தினர். இன்னும் சிலரோ பலரோ இருந்திருக்கலாம். அவர்களைப் பற்றிய கதைகள் இல்லையாதலால்  அவர்களை நாமறிந்தோமில்லை.

கணவன் எந்த நெறியில் நின்றனனோ அதே நெறியில் மனைவியும் நிற்கவேண்டும் என்று சிலரோ பலரோ விரும்பியதை அகலியையின் கதை நமக்கு உணர்த்துகின்றது. அகலியை இந்திர வணக்கம் மேற்கொண்டிருந்தாள். அவள் கணவனுக்கோ  அது பிடிக்கவில்லை. ஆகவே இந்திரனிடத்து அவள் சோர்ந்துபோனதாக கதை சோடிக்கப்படுகின்றது. அவளுடைய சோரம் மனம் தொடர்பானது ஆகையினால் அவள் உடலளவில் பத்தினியே ஆனாள். கணவனால் கண்டிக்கப்பட்டு எதையும் செய்ய இயலாத நிலையில் அவள் கல்லென்று வருணிக்கப்படுகின்றாள். இராமனைக் கண்டு போதம் பெற்று உணர்வடைந்த திருப்புநிலையில் அவள் மீண்டும் பத்தினியாகிறாள். இதிலென்ன தடை?  அவள் சோரம் என்ற சோர்வுநிலை தான் உடலைப் பற்றிய தன்றாயிற்றே!  ஆகவே மத மாற்றத்தினால் ஒருத்தி தன் பத்தினித்தன்மையை இழந்து பெறலாம்; ஆனால் உடல்சோரத்தினால் அது திரும்புவதில்லை என்ற உண்மை தெளிவாகிறது.

 

அகலியை என்ற பெயரைத் தமிழால் வால்மீகியார் நன்றாக நன்றாகப் படைத்துள்ளார்.  இந்திர நெறியினின்று  அகன்று  (  அகல் )  பின் இராம போதனையால் வந்து இணைந்து ( இயை ) இடையில் தோன்றிய கல்லென்ற நிலையை மாற்றிக்கொண்டவள் அகலியை.  கொள்கையளவில் கணவனுடன் கொண்ட கருத்துவேறுபாட்டினால் கணவன் தன்னைத் தொட அனுமதிக்கவில்லை அவள்.  ஆகவே கல்லானாள் : கல்லென்றால் உண்மையான கல்லன்று;  உணர்வற்றுக் கணவற்கு உடன்படாமை இதன் பொருள்.  கவிதையில் அணியியல் கடைப்பிடிக்கலாம்  கல்லே மிகத் திண்மை உடையது.

இப்படிப் பிற மதங்களிலும் தனிவரலாறுகளிலும் கல் உருவகம் பெற்றுள்ளதென்பதை எழுதலாம். சொந்தமாகக் கண்டுபிடியுங்கள். இங்கு எழுதவில்லை.

மேற்கொண்டு சில விளக்கங்கள் இங்கு உள.

https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_30.html

படித்தறிந்து இன்புறுக,

 

 

 

 

 

 

This entry was posted in Tamil Lit, Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.