puja

சமஸ்கிருதம், ஓர் இந்தோ ஐரோப்பிய மொழி என்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். எனவே. ஒரு சொல் சமஸ்கிருதம் என்று சொல்வதென்றால், அச்சொல்லுக்கு இனமான சொற்கள், அவஸ்தான், தொடக்கம் ஏனை இந்தோ ( செர்மானிய) ஐரோப்பிய மொழிகளில் இருக்கவேண்டும் . ஏராளமான திராவிட மொழிச்சொற்களும் இந்தோ ஐரோப்பியத்தில் உள்ளன. தமிழ் முதலான திராவிட மொழிகளில் இருந்து குறிப்பிட்ட சொல் இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்குத் தாவ வில்லை என்பதையும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

இப்போது விடயத்திற்கு வருவோம்,

1. பூஜை (பூஜா) என்னும் சொல் ஐரோப்பிய மொழிகளில் தொன்றுதொட்டு வழங்கவில்லை. இப்போது அண்மையில்தான் அச்சொல்லை அவர்கள் அறிந்துள்ளனர்.

2 ருக் வேதத்தில் அல்லது ஏனை முந்தியல் சமஸ்கிருத நூல்களில் அச்சொல் இல்லை என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.பிற்கால நூல்களில்தான் உள்ளது.

3. அவஸ்தான் மொழியில் அச்சொல் இல்லை.

4 ஓர் ஈரானிய மொழியில் “பூசார்” *என்ற சொல் இருக்கிறது. அங்கு அதற்கு மகன் என்ற பொருள் உள்ளது.

5 பூவும் நீரும் வைத்து வணங்கும் முறை திருமந்திரம் முதலிய நூல்களில் சொல்லப்படுகிறது. இம்முறை வேத நூலாகிய ருக்கில் சொல்லப்படவில்லை என்கின்றனர்.

6 இந்தியல் (Indology) நூலார், இது தென்னாட்டுச் சொல் என்கிறார்கள்.(1)

7. தமிழறிஞரும்(2) மொழிநூலாரும்(3) இது திராவிடச் சொல் என்கின்றனர்.

பூசார் என்ற ஈரானியச் சொல், பூஜைக்கு இனமானது (cognate) என்று கொண்டு (that is, on such assumption), அதை , சமஸ்கிருதம் எனலாமா?

உங்கள்விடை யாது?

Why not we say, pusar (Iranian) > Puja (Skr) > Pujari (Skr) > puujaari (Tam)?.

The materials for you to work on the issue are given above and I think quite comprehensively.

Notes,

* Iranian Lexicographers.
(1) Prof. of Indology, Dr R C Majumdhar, Vedic India. Bharatiya Vidya Bhavan.
(2) Dr A Chidambaranatha Chettiar, Annamalai University, (1960)
(3) Devaneya Pavanar, see “Devaneyam” edited by Pulavar ILangkumaranar, Also others.
_________________*********************

Pu- to be washed or purified; ja – birth, light ,lustre. This pu+ja does not seem to arrive at the meaning “worship” which is basically what puja is. See if you can interpret the words and join them so as to give the intended meaning. If you are successful, then you can conclude for yourself that puja is a Skrt word in its own right without any connection to Iranian.

The following notes will help you in the enterprise.

Please note that thus far I have not given any conclusion as mine. I have merely posed a linguistic problem for you to exercise. Given you the materials for you to work with.

I will come back after you have attempted the problem question with some conclusion emerging from you.

Notes.

*In the Pali language, puja means reverence.

1. pU to make clean or clear or pure or bright , cleanse , purify , purge , clarify , illustrate , illume with , to cleanse from chaff , winnow ; with , to enlighten the understanding “‘ ; to wash gold ” RV. ; (met.) to sift , discriminate , discern ; to think of or out , invent , compose (as a hymn) RV. AV. ; to purify one’s self. be or become clear or bright ; (esp.) to flow off clearly (said of the Soma) RV. ; to expiate , atone for 4 ; to pass so as to purify ; to purify in passing or pervading , ventilate RV. &c. : Pass. , to be cleaned or washed or purified ; to be freed or delivered from (abl.). also ; aor. -apIpavat} Gr. ; Pass. pAvyate Kav.) , to cleanse , purify: , Gr.: Gr. Germ. {Feuer} ;,3] {fire}.
3 pU 2 mfn. cleansing , purifying (ifc. ; cf. %{annauda-} , %{ghRta-} &c.)
4 pU 3 mfn. (1. %{pA}) drinking (see %{agre-pU4}).

5 ja – born or descended from , produced or caused by , born or produced in or at or upon , growing in , living at born or produced and prepared from , made of or with ,; `” belonging to , connected with , peculiar to m. a son of (in comp.) ; a father L. ; birth L. ; a daughter
3 ja 3 . speedy , swift L. ; victorious L. ; eaten W. ; m. speed L. ; enjoyment L. ; light , lustre L. ; poison L. ; a Pisaca L. ; Vishnu L. ; Siva L. ; a husband’s brother’s wife L.

———————————————-

ஆய்வாளர்களின் முடிவு:

பூ செய் > பூசை

பூசை (தமிழ்) > பூஜை (சம.)

பூசை> பூசனை.

பூசை >பூசாரி.

ஆரி என்பது ஒரு தமிழ்ச் சொல்லீறு. example:

தலையாரி

பூசாரிக்குச் சமஸ்கிருதத்தில் “புரோகித” என்பது.

ஈரானியச்சொல் “பூசார்” என்பதிலிருந்து பூசாரி என்ற சொல் அமையவில்லை.

“பூ” (Skrt word, not the Tamil word “poo”) “ஜா” (Skrt) என்ற தனிச்சொற்களிருந்தாலும், இவற்றை இணைத்து, வழிபாடு என்ற பொருளுக்கு வரமுடியவில்லை, ஆதலால் இவை “பூஜா” வின் அடிச்சொற்களல்ல.

சில சொற்களைப் பிரித்துப் பார்த்ததுத்தான் பொருள் காணமுடிகிறது. பிரிக்க இயலாத சொற்களைப் பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். வேறு முறைகளைக் கையாளுவார்கள்.
இதில் உறுத்துகிறது என்கிறீர்கள். ஏனென்று அறிந்துகொள்ளலாமா?

Majumdhar, a leading authority and professor in Indologist, a Brahmin scholar in Sanskrit, has said puja is a Dravidian word. Pl follow this authority. I have given the name of the book and the publisher. Pl read the book,

The term puja is not found in any related Indo-European languages.

இப்போது பத்மஜா என்ற சமஸ்கிருதச் சொல்லைப் பார்ப்போம்.

இதைப் பத்ம + ஜா என்று பிரிக்கவேண்டும்.

பத்ம – தாமரை.

ஜா – பிறந்தோன்/ பிறந்தோள் / பிறந்தது.

எனவே பத்மஜா – தாமரையிற் பிறந்தோன்

பிரித்துப் பார்த்துத்தான் சமஸ்கிருதத்தில் பொருள் கூறுவார்கள்.

இதைப் பார்த்துவிட்டு சம்ஸ்கிருதப் பண்டிட்டிடம் சண்டைக்குப் போய்விடாதீர்கள்.

இப்போது பாபஜா என்ற சம்ஸ்கிருதச் சொல்லைப் பார்ப்போம்.

பாப + ஜா = பாபஜா.

பாப= பாவத்தில்,
ஜா = பிறந்தது.
ஆகவே பாபத்தில் பிறந்தது என்று பொருள்.

இதைப் பிரித்துப் பார்த்துதான் பண்டிதர்கள் பொருள்கூறுவர்.

 

Advertisements
This entry was posted in etymology. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s