விதவை.

இப்பிறப்பில் ஒரு பெண், தன் கணவனுடன் இனிது வாழ்வதே வாழ்வின் குறிக்கோள் என்பர்.
இதற்கு ஏற்படும் மிகப் பெரிய மாறுபாடு யாதெனின், கணவன் இறந்துவிடுதலே.

முன் காலத்து வழக்கப்படி அவள் உடன்கட்டை ஏறுதல் வேண்டும். இல்லையேல் ஏறத்தாழத் துறவொழுக்கம் போன்ற ஒரு நடைமுறையைப் பின்பற்றி வெள்ளுடை யணிந்து,தலைமுடியை மழித்து, மொட்டையாய் வாழ்தல் வேண்டும்.

இது சரியா தவறா என்று வி(ரி)வரிக்காமல் சொல்லை ஆய்வோம்.

வி என்பது வீதல் என்பதன் குறுக்கம். வீ> வி.
தவம் > தவ + ஐ = தவை. என்றால் கணவனைக் காப்பாற்றி அவனுடன் இனிது வாழ்தலையே தவமாகக் கொண்டவள்.

ஆக: விதவை என்றால் கணவன் வீழ்ந்த இல்லறத் தவப்பெண்.

வீ + தவை = விதவை.

இது எப்படிப் பார்த்தாலும் தென்சொல்லே.

வீ ‍–வீதல்; சாதல்.
தவ ‍=மனிதன் என்பாருமுண்டு,

தவ =மனிதன் என்பது இவர்கள் பிறழ்பிரிப்பால் உண்டாக்கிய சொல்.

இந்த விதவை என்னும் சொல், பல மேலை மொழிகளிலும் இடம்பெற்றுள்ளது..கணவன் வீழ்ந்த மைம்பெண்ணுக்குத் தனி
வாழ்க்கைமுறை அங்கிருந்ததா என்பது ஆய்வுக்குரியது

This entry was posted in etymology. Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.