Yearly Archives: 2007

உங்கள் கருத்தை

உங்கள் கருத்தை ஒருவெள்ளைப் பாட்டினால்இங்கு பதிக்க எழுந்தோடித் — தங்குதடைஏதுமில்லை வந்தே இனிப்புணா போல்தந்துமாதறியச் செய்வீர் மறுத்து. இனிப்புணா – மிட்டாய். வெள்ளைப் பாட்டு = வெண்பா.மாதறிய = (யான் அறிய). உரை: மறுத்து = என் கருத்தை மறுத்து; உங்கள் கருத்தை ஒரு வெள்ளைப் பாட்டினால் இங்கு பதிக்கத் தங்குதடை ஏதுமில்லை; எழுந்தோடி வந்தே; … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

Kaantharuvam காந்தருவம

On the word "kaantharuvam"  used in Tolkaappiyam கண்டவுடன் தன்னை – தன் உள்ளத்தை ஒருவருக்கொருவர் தந்து காதலர் ஒன்று படுதலை, "காண் தருவம்" என்று பண்டைத் தமிழர் குறித்தனர். காண் = காணுதல்; தரு = தருதல். இது பின் காந்தருவம் என்று மருவியது. மறை என்றது தமிழ் நூல்களை. மறையோர் = … Continue reading

Posted in etymology | Leave a comment

கற்பவை கற்ற

கற்பவை கற்றுவெண் பாவிலே காவியங்கள்பொற்புற இங்குப் புனைதிறனார் — சிற்பியர்மீண்டுந்தம் பொன்னேரம் மேலும் களைகிலார்ஈண்டுப் பெறுவதொன் றில்?

Posted in MY POEMS | Leave a comment

காலத்தை வென்றிருப் பார்.

நாலுசுவை நன்கிரண்டு நண்ணாதார் நாளுமேகூலம்நன் குப்பிட்டுட் கொண்டாரேல் — ஞாலத்தில்ஆலமிலா நெஞ்சராய் ஆவி தமிழ்க்கீந்துகாலத்தை வென்றிருப் பார்.

Posted in MY POEMS | Leave a comment

யானறியேன்

காதில் விழுந்த கழறுரைகள் பற்பலவேஏதிவற்றுள் யானறியேன் மெய்யென — ஓதுபவர்தங்கட்சிச் சாய்வாகத் தாளங்கள் போடுவரேல்மங்கினரே மாண்பும் இலர்.

Posted in MY POEMS | Leave a comment

கோயில்கள் உடைத்தார

இரக்கமின்றிக் கோயில்கள் உடைத்தார் என்று இன்றல்ல முன்பேநாம் கேட்ட துண்டு!உறக்கமின்றிச் சிந்தித்தும் அயர்ந்த துண்டு,உலகினிலன் முறைநீங்கத் தொழுத துண்டு!தருக்கமின்றி உண்மையதென் றிருக்கும் போதுதகுந்தநட வடிக்கையவை உடைத்தல் என்றுமறுக்குமுரை மாத்தமிழர் தாமே செய்தார்மயங்குகிறோம் மாயமுண்டோ மெய்யில் தானே.

Posted in MY POEMS | Leave a comment

உண்மைத் தெய்வம்;

தான்வணங்கும் தெய்வமதே உண்மைத் தெய்வம்;தரணியிலே தெய்வமதே போற்றிக் கொள்வீர்வான்கிழிய இங்ஙனமே கூவும் மாக்கள்வரையின்றிப் பல்கிவிட்ட காலம் தன்னில்தேன் தமிழும் சைவமதும் ஏத்தும் நாமும்திகைப்பினிலே தேய்ந்துமனம் தேங்கி நின்றோம்;கூன்படுமோ தான்பிறரை வீணே மாய்க்கும்குறுக்கமுறு கிறுக்கர்களின் மூடப் போக்கே?

Posted in MY POEMS | Leave a comment

மாநிலம் வாழ்கெனும் மாண்பொரு நிலையே.

என்மனம் என்றுமோர் இரும்பு – அதில்இன்னல் எனவரும் பின்னலோ துரும்பு;பன்முனைத் தாக்குதல் வரும்பார் — நான்பதுங்கிய பின்புதான் பாய்ந்திடும் பெரும்போர்! தமிழன் எனப்பெயர் உரைப்பார் — நான்தனியன்என் றாலும் கூடினும் தரைப்போர்,இமிழ்கடல் வான்வெளி எதிலும் – நிகர்இல்லை எனப்படல் முன் திகழ் பதிவே. வீறுகொள் நெஞ்சமென் உளமே — அதைவீணே கிளறிடில் காண்பரென் பலமே!மாறுகொள் வாழ்வினி … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

தொண்டு

நம்மவர்க்கும் நம்மொழிக்கும் தொண்டு ஆற்றி மாண்டால் நாம்தமிழர் நம்மொழியைப் பேசித் தொண்டுநம்மவர்க்கும் நம்மொழிக்கும் ஆற்றி மாண்டால்நாம்நம்மின் உள்மனத்தில் கொண்ட துன்பம்நல்லபடி வெளிக்காட்டிக் கண்ணீர் சிந்தும்ஏமார்தல் என்றெனினும் எங்கும் வேண்டும்;இறந்தோனின் இடம்கட்சி இன்ன தீம்பாய்கூம்பறிவர் வீண்பிரிவு கூறல் போலேசோர்வில்லா மூளையர்கள் சொல்ல மாட்டார். ஏமார்தல் = மனம் கலங்குதல் (ஏமாறுதல் என்பது வேறு).

Posted in MY POEMS | Leave a comment

வருந்த வழிவைத்த வாய்.

முன்போலே இல்லை முகரையும் தொங்கியதேஅன்பே அணைந்ததோ அற்றதுவோ — வன்பால்விழுந்த விதைபோலே வீணாம் விளைவால்வருந்த வழிவைத்த வாய்.

Posted in MY POEMS | Leave a comment