ஐயப்பனும் அம்மா அப்பா சண்டையும்

As we become more devout, we should reduce and destroy our own anger, hatred and impulsive actions against all others around,,,,,(neighbors)

SIVAMAALA LITERARY

ஐயப்பனும் அம்மா அப்பா சண்டையும்

அந்த வீட்டு அம்மா ஆண்டு தவறாமல் ஐயப்ப மலைக்குப் போய் அவரைத் தெரிசனம் செய்துவிட்டுத்தான் வாழ்க்கையின் மற்ற அலுவல்களைத் தொடர்வார். அந்த வீட்டு ஐயா மூச்சுத் திணறல் (ஆஸ்துமா) நோயாளி, வயது ஆகிவிட்டாலும் ஒரு கிட்டங்கியில்   (godown) காவலாளியாக இன்னும் வேலைபார்த்துக்கொண்டு செலவுக்குக் கொஞ்சம் காசு சம்பாதித்துக்கொள்பவர்,

அவர் ஐயப்ப மலைக்குப் போவதில்லை, அம்மா தன் சொந்தக் காசில் பிள்ளைகள் தரும் காசையும் போட்டுப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு
கொச்சி வழியாகவோ அல்லது திருச்சி வழியாகவோ பறந்துபோய்த் தெரிசனம் செய்து வருவார். ஒண்டியாகப் போவதில்லை, அவருடன்
வருடாவருடம் போக ஒரு பக்தர் கூட்டமே இருக்கிறது,

வேலைக்குப் போன நேர‌மும் பயணம் போய்வரும் காலமும் நீங்கலாக அம்மாவுக்கும் ஐயாவுக்கும் ஓயாத சண்டையாம். கத்திக்கொண்டே இருப்பார்களாம். சமையற் கட்டுக்குள் இருவரும் ஒன்றாக நிற்க முடிவதில்லையாம்,

அவர் ஒரு கோப்பையைக் கழுவினால் தண்ணீர் எங்கும் தெரித்து வீடு தரை ஈரமாகி விட்டதென்று அம்மா கிளம்பிக் கத்த ஆரம்பித்து விடுவார்களாம், ஒரு நாள் ரசம் வைக்கவில்லை என்றால் அன்று
வீட்டில் மகாபாரதம் நடத்திக்கொண்டிருப்பாராம்  அவர்.. பல வருடங்கள்
இப்படிக் கழிந்தன.

இந்த வருடம் அம்மா சபரிக்குப் போவதைப் பிள்ளைகள் அனுமதிக்க வில்லை. காசைச் செலவு செய்துகொண்டு போய்வந்து அடைந்த‌
பயன் ஏதுமில்லை என்று பிள்ளைகள் சொல்லிவிட்டார்கள்.

அங்கு போய் வந்தாலும் இரண்டு பேருக்கும் வாய் அடங்கவில்லை
என்கிறார்கள். ஒவ்வொரு சிறு காரியத்துக்கும் ஒரு…

View original post 87 more words

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s