பரத தேசம்! சென்றவர்

 

கண்களைக் குணப்ப டுத்தச்

சென்றவர் பரத தேசம்!
கண்குணம் அடைந்த பின்னர்
கனிவுடன் வருவார் என்றே
என்மனம் எதிர்பார்த் திங்கே
இருந்ததே!எதனால் வந்து
பொன்புனை கவிகள் செய்யப்
புகவில்லை புரியா துள்ளேன்.

எழுத்தவாம் கவிகட் கெல்லாம்
இருக்குமோ புவியில் ஓய்வும்?
பழுத்தவோர் அறிவில் ஓங்கும்
பைந்தமிழ்ச் சுதாமர் தம்மை
வழுத்துவோம் வாழ்கவென்று[
வருதலைக் கருதார் ஆயின்
விழுத்துணைக் குடும்பத் தோடு
விளைந்திடும் இன்பம் காண்க!!

 

Written on 8th May 2012, 06:13 PM. for a forum friend who had gone for an eye-operation from US to India.

After the operation, we heard little about him and it seems he had retired from internet activities. We wish him well.

Advertisements
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s