varuNam, tharuNam etymology

        opportunity என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, “தருணம்”, “வாய்ப்பு”, “அற்றம்” என்றெல்லாம் தமிழில் பொருள் கூறலாம்.

இந்த ஆங்கிலச் சொல் எப்படி வந்ததென்று அறிஞர் திட்டவட்டமாகக் கூறவில்லை. பலர் “முழங்கைக்கு இடம்” (elbow space) என்ற கருத்தில் அமைந்ததாகச் சொல்வர்.”ஒரு பிடிகிடைப்பது” (to get a handle ) என்பதாகவும் பொருள்பட்டிருக்கலாம். There has been no final decision on how this English word evolved.

தமிழில்:

தருணம் ( தரு+ உண்+ அம்) தந்தது உளதாகுதல். இதில் உண் என்பது உள் என்பதன் வேறு வடிவம். தருணம் என்பது சூழ்நிலை நமக்குத் தரும் ஒரு வசதி. அடிப்படைக் கருத்து: தருதல் என்பதே. இதிலும், “உண்” என்பது உகரம் கெட்டு “ண்” என்றிருக்கிறது.

இங்ஙனம் உகரம் கெடுதல், பிற சொல்லமைப்புகளிலும் காணக்கிடைக்கின்றது.

வரு + கு + இன்று + அது.
வரு + க் + இன்று + அது (ஓர் உகரம் கெட்டது)
வரு + கின்று + அது.
வரு + கின்ற் + அது (இன்னொரு உகரம் தொலைந்தது)
வருகின்றது.

வருகுவின்றுவது என்று வகர உடம்படு மெய்கள் வந்து சொல்லமைப்பைத் தேவையில்லாமல் குழப்பவில்லை என்பதை உணரவேண்டுமே.

தருணம் – தந்து உண்டாகிய …நேரம், …வசதி, ….நிலை என்றெல்லாம் சொல்லமைப்புப் பொருளை அறிக.       

 

தருணம் என்பதில்போல வருணம் என்பதிலும் “உண்” என்ற துணச்சொல் இடைநிற்பதைக் கூர்ந்துணரலாம்.

(வர்) – வரி (இ)
(வர்) – வரிசை (இ+சை)
(வர்) – வரை – வரைதல். (ஐ, ஐ+தல்)
(வர்) – வரு – வருடு – வருடுதல். (டு, டு+தல்)
வருடுதல் என்பது விரல்களால் வரியிடுதல் போலத் தடவுதல்).
(வர்) – வரி – வரித்தல்.
வரிகளை உண்டாக்குதல், வரிகளை வண்ணங்களால் வரைந்து, மணப்பெண்ணை அழகுபடுத்துதலும் பின் அவளை மணத்தலும். ##

(வர்) – வரி / வரு + உண் + அம் = வருணம்.

Well, to be comfortable, you will need some more explanation. I shall return …

## Note: This has been so explained by other researchers.       

 

        வருணம் என்பது பல மொழிகளிலும் பரவிவிட்ட ஒரு சொல். அது எம்மொழிக்குரியது என்று தீர்மானிப்பது எளிதன்று. மலாய் மொழியில் கூட இச்சொல் உள்ளது. அதற்கு அங்கு “நிறம்” என்று பொருள்.

முதலில், சமஸ்கிருதம் என்னும் சங்கத மொழியில் அது எப்பொருளை உடையதாய் இருக்கின்ற தென்பதை அறிந்துகொள்வோம்.

varNa

1 a covering , cloak , mantle (L.) ; a cover , outward appearance , exterior , form , figure , shape , colour (Rig Veda. &c. &c. )

2 colour of the face , (esp.) good colour or complexion , lustre , beauty ( Manu &c. ); colour , tint , dye , pigment (for painting or writing) (Maha Bharatam. &c. );

3 colour = race , species , kind , sort , character , nature , quality , property (applied to persons and things) ( Rig Veda. &c. &c.) ; class of men , tribe , order , caste

4 a letter , sound , vowel , syllable , word ; a musical sound or note (also applied to the voice of animals) ( Maha Bharatam.) ; the order or arrangement of a song or poem ;

5 praise , commendation , renown , glory

6 an unknown magnitude or quantity ; (in arithmetic.) the figure , `” one “‘ ; (accord. to some) a co-efficient ; a kind of measure ( L.)

7 gold (L.) ;

8 a religious observance (L.) ; one who wards off , expeller (Rig Veda.)

9 Cajanus Indicus ( L.) ; n. saffron ( L.)
[Compare. according. to some , (Slavonic {vranu} , `” black “‘ , `” a crow “‘ ; ( Lithuanian {vArnas} , `” a crow. “‘]

10 relating to a sound or letter (in grammar.)

will edit later and will continue       

 

        தமிழில் வருணம் என்பதற்கான பொருள்.

varuNam
1. colour;
2. the four-fold occupational divisions
3. caste divisions
4. letter;
5. beauty;
6. brightness;
7. varnini turmeric;
8. streak of gold on the touchstone;
9. gold;
10. fame;
11. praise;
12. fragrance;
13. disguise;
14. manner;
15. style;
16. elephant
17. water

தமிழிலும் சங்கதத்திலும் இது பெரிதும் பொருளொற்றுமை உடைய சொல் என்று கருதப்படுகிறது. You may now compare.

        வருணம், தருணம் என்பனவற்றில் இடைநிற்பது “உண்” என்று கூறப்பட்டது.
மேல் இடுகைகளை நோக்குங்கள்.

இந்த “உண்” என்ற சொல், சில வினைச்சொற்களிலும் வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். (முதனிலைத் தொழிற்பெயர்கள் எனினுமாம்)

வெட்டுண்ட கை.
கட்டுண்ட காளை.

இங்கு “உண்” துணைவினை எனலாம். இதுபோன்ற ஓரமைப்பினையே வருணம், தருணம் என்பனவும் பின்பற்றியுள்ளமை தெளிவு.

அரைப்புண்ட மாவு
கழிவுண்ட மூலிகை வேர்கள்.
தொய்வுண்ட காரியங்கள்

இங்கு அரைப்பு, கழிவு, தொய்வு என்ற தொழிற்பெயர்களை அடுத்து “உண்” என்னும் வினை எச்சமாக நிற்றலைக் காணலாம்.

இவ்விடத்திலெல்லாம் “உண்” என்பது தின்னற்கருத்தை உணர்த்தவில்லை, அதுவேபோல் வருணம், தருணம் என வருவனவற்றுள்ளும் அக்கருத்திலதாதல் அறிக.       

 

      

 
Advertisements
This entry was posted in etymology. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s