பழுதில் தொழில்புரிவான்

நெடுஞ்செவி தானுடையோன் –கேட்க
நேரிதல் லாதது நாணுடையோன்.
கொடுமொழி காழென்பதே — அன்றிக்
கூறப் பிறமொழி யாதுடையான்?

பழுதில் தொழில்புரிவான் —முதுகு
பளுவில் அழுந்தினும் நோவுரையான்
கழுதை எனப்பழிப்பார் — தொடர்பு
காணாப் பொழுதிலும் பேரிழுப்பார்.

காலக் கணக்கெடுப்பால் — ஏதும்
கட்டுகள் இல்லா கடுமுழைப்பால்,
நீலக் கடலலைபோல் — படும்
நெட்டிடர் சொல்லாlல் தொடுத்திழைப்போம்.

குட்டிச் சுவரருகில் — அதைக்
கொண்டு நிறுத்தும் அவர்புகல்வில்,
எட்டி உதைப்பதுபோல் — பல
ஏளனச் சொற்கள் விதைப்பதுண்டே!

அரியது சேவைஎன்றால் — அதற்
கழகிலை என்பதால் நோவொன்றுசொல்,
உரியது ஒருவிலங்காய் — அஃது
ஒதுக்கம் அடைதல் வருமொழுங்கோ?

அருஞ்சொற்கள்.

நேரிதல்லாதது – நேரிது அல்லாதது : நேர்மை அல்லாதது.
புகல்வு – புகலுதல். புகல்வில் = சொல்லுதலில். பேச்சில், நோவொன்றுசொல் = துன்பம் வந்து ஒன்றுகின்ற, அல்லது தொடர்புபடுகின்ற சொல். (நோ(வு) ஒன்றும் சொல்.)

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s