கணையைக் கதிமாற்றிவிட்ட குருவி

தனக்கு வந்ததைப் பிறனுக்கு அம்பாக்கி மாற்றிவிடும் தந்திரசாலிக் குருவியைப் பற்றிய வரிகள் இவை:-

அந்த மரத்திலொரு குருவி — நான்
அறியா ஒலியினில் பாடியதே!
அந்தி மயக்கினிலே நழுவி — மனம்
அங்கு கவனத்தில் ஓடியதே.

என்ன இசையிது சொல்வாய் — என
யானும் ஆவலொடு கேட்டுநின்றேன்;
உண்ணப் பூச்சிபுழு கொல்வேன் –அவை
ஓலம் இட்டவொலிப் பாட்டென்றதே.

தனது செயலைப்பிறர் மேலே– போடும்
தந்திரம் உனக்கும் வந்ததுண்டோ?
மனிதர் என்பவரைப் போலே — சென்று
மாறும் அடிச்சுவடு முந்தியுண்டோ?
_________________

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s