சந்திக்கும் வேளை

ஒவ்வொரு நாளும் ஒருவெண்பா பாடினார்பால்

செவ்விய பாத்திறனும் சேர்ந்திடுமே — கவ்விக்

கடிக்கக் கடிக்கவே ் கெட்டியுண்டை நெல்லும்

இடிக்க இடிக்கவே தூள்..

ஒரு தோட்டத்துப் பூ.

தோட்டத்தில் மலர்ந்திருந்தேன்

தொட்டிட வந்தாய் தோழி

காற்றென அசைத்தாள் என்னைக்

காத்தனள் கொஞ்சநேரம்;

ஆட்டமோ என்னைக்கண்டே

அசையாதே என்றவாறு

பூட்டினாய் விரல்கள் என்மேல்;

பூவெனைப் பறித்தேவிட்டாய்!

வருடினாய் விருப்பம்போலே

வகைகெட மாட்டிக்கொண்டேன்

நெருடினாய் நிமிர்த்திமோந்து

நேர்ஒரே முத்தம்தந்தாய்!

குருடனே என்றேவையக்

கொதித்திட வலிமையில்லை.

மருள்தரக் கசக்கிப்பின்னே

மாய்ந்திடக் களைந்திடாதே!
_________________

ஓபாமா

கறுப்பினத்தார் மிசையிருந்த காய்தல் மாறிக்

கணித்ததொரு பொருத்தம்போல் ஏற்றுக் கொண்டு,

பொறுப்பினிலே குடியரசின் மேலோன் ஆகப்

புகுத்திவிடப் பொதுத்தேர்தல் மேவச் செல்லும்

மறுப்பரிய ஓபாமாவின் ஏற்றம் போற்றி

மதிப்புரைகள் மலிந்துவரும் மாண்பில் ஞாலம்

விருப்பினுடன் ஈடுபடும் ; வேறு பாடு

வேருடனே களைவுற்று வீழ்ச்சி காணும்.

மொழிநூல் அறிஞர் அகத்தியலிங்கம்

தமிழ்த்தொண்டால் விரிந்தபுகழ் அடைந்த செம்மல்

தஞ்சையிலே பல்கலையில் தலைமை ஏற்றார்

அமிழ்தமொழிப் பெருமைதனை உலகம் காண

அயர்வின்றி உழைத்திட்ட அறிவின் மேலோர்்;

கமழ்தருமோர் மொழியறிவுக் கலையை, வெல்லும்

கணிப்புடைய கருத்துகளை எடுத்துச் சொன்னார்

இமிழ்கடல்சூழ் உலகிலகத் தியலிங்கம் போல்

இனியொருவர் இல்லைஇது துயரம் தானே.
_________________

தெளிவாய்த் தெரியாத கண்கள்

அரைக் குருடு!

ஒளியே இல்லாத கண்கள்

முழுக் குருடு!

மலிவாய்க் கிடடாத எண்ணெய்

அதுவும் "குருடு!"

எளியோர்க்கு உதவ இயலா

நிதிவல்லோர் தாமும் குருடே!

அரிசி விலை மும்மடங்கு ஏறிவிட்டதே!

வழியறியோம் என்றரசு கூறிவிட்டதே!

குருட்டு உலகில் குருடு காரணம்

கலகங்கள் இல்லையென ந்ிலைமை மாறணும்.

நிலைமை மாறுமோ?

துன்பம் தீருமோ?
_________________


சந்திக்கும் வேளை

நலமா எனவினவி

முந்திக் கொளல்தான்

முழுவதும் ஆணியல்போ?

தோழியரோ புன்னகைப்பார்;

தொட்டொளிரும் கண்களுமே!

வாழியென வாழ்த்தாத வாழ்த்து.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s