சில வெண்பாக்கள்

அப்படி என்றால் அழகுதொரன் றோவிலே
எப்பொருளும் கிட்டுமோ எண்மையாய் — செப்படி
வித்தைதான் யாதோ விலையேறா மைக்கென்றே
மெத்தமகிழ் வோடுரைப் பீர்.

குறிப்புகள்:

எண்மை – எளிமை.
‘விலையேறா மைக்கென்றே’ – இதை "விலையேறாத் தன்மைக்கே" என்று மாற்றுக : இப்படிச் செய்தால் வகையுளி தேவையில்லை.

எண்ணெய்
: இதை எண்ணை என்பர் பேச்சுவழக்கில். இப்படியே (எண்ணை என்று) தாளிகைகள்
சிலவும் நல்லெண்ணெய் தாயாரிப்பாளர்களும் எழுதுகிறார்கள

இன்னிசை வெண்பா

வெங்கா அவர்கள் விரைந்திங்கு வந்துடன்
தங்கள் இருப்பிடத்தில் தானியங்கள் உண்பொருள்
எண்ணெய் இவற்றுக்கே இட்டவிலை செப்பிடுக
உண்மை அறிய உலகு.

மேலும் முதல் பாட்டில் மூன்றாம்
வரியில் "நன்னாட்டில்" என்ற சீரை "நன்னிலத்தில்" என்று மாற்றுவதால் பொருள்
வேறுபடுமா , யாது நன்மை என்பதையும் சொல்லுங்கள்.

Sivamaalaa
********

Group: Active Members
Posts: 2,401
Joined: 9-February 06
From: mysin
Member No.: 86

நேரிசை வெண்பா

நலமே நலமறிய ஆவலாய் உள்ளேம்
புலமே பெயர்ந்துவாழ் பொன்னாம் — குலம்வளர்
நன்னாட்டில் நீங்களும் நற்றமிழ் மக்களும்
எந்நலமும் ஏற்றுவாழ் வீர்.

கருத்தீடு கண்டு கடிந்தியா தொன்றும்
மறுத்தீடு தந்திட மாட்டார் — பொறுத்திலார்;
ஓடிச் சிலநாள் ஒளிந்தார்போல் பின்வந்து
நாடினார்் நண்பர் பலர்.

பதவுரை:
கருத்தீடு கண்டு = இடப்பட்ட கருத்தினைக் கண்டு; ஈடு = இடுதல்; முதனிலை திரிந்த தொழிற்பெயர். ஒப்பு நோக்குக: வெளியீடு.
கடிந்தியா தொன்றும = கடிந்து யாதொன்றும்; சினங்கொண்டு ஏதும்;்
மறுத்தீடு = மறுப்பு இடுதல்;
தந்திட மாட்டார் — தரமாட்டார்;
பொறுத்திலார் = பொறுப்பதும் இல்லாதவர்;
ஓடிச் சிலநாள் ஒளிந்தார்போல் = சிலநாள் ஓடி ஒளிந்துகொண்டவர்போல் பாவித்துக்கொண்டு;
பின்வந்து = பிறகு தோன்றி;
நாடினார்் நண்பர் பலர = பழையபடி நட்பு பாராட்டியவர் அல்லது நட்பினர் ஆனவர் பலர் ஆவார்.

கருத்துரை:
பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை; நட்பின்காரணமாக மறுத்துரைக்கவும்
முடியவில்லை; இந்நிலையில் தற்காலிகமாக ஒளிந்திருந்துவிட்டு மீண்டும்
தோன்றும் அருமைமிக்க நண்பர் பலர்.

களம்சேர் கருத்தாளர்் காணுங்கால் தங்கள்
வளம்சேர் கருத்துகளை வைப்பில் — குளம்போல்
வெளிவிடார் எம்மிடுகை வேகம் படித்தே
களிகொளார் கைவிடு வார்.


இப்பாடலுக்கான பதவுரை வருமாறு:

காணுங்கால — ஆய்வு செய்யுங்கால்;
களம்சேர் கருத்தாளர் — இணைய களங்களுக்கு வருகை புரியும் கருத்துடையோர்;
தங்கள் — தங்களுடைய;
வளம்சேர் கருத்துகளை — வளமிக்க கருத்துக்களை;
வைப்பில் — (தாங்களே ) வைத்துக்கொள்வதில்;
குளம்போல் — தன் நீரைத் தானே வைத்துக்கொள்ளும் குளத்தைப்போல;
வெளிவிடார் — வெளியே விடமாட்டார்கள்:
எம்மிடுகை வேகம் படித்தே — யாமிடும் இடுகைகளை வேகமாக (மேலெழுந்தவாரியாகப் ) படித்துவிட்டு;
களிகொளார் — மகிழ்ச்சியும் கொள்ளமாட்டார்;
கைவிடு வார். — மேற்கொண்டு கவனிக்காமல் விட்டுவிடுவர்.

கருத்துரை: களங்களில் கருத்துப்பரிமாற்றமென்பது மிகவும் அருகியே நடைபெறுவதாகத் தெரிகின்றது.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s