இரக்கம் உறங்கிடுமோ

இரக்கம் உறங்கிடுமோ

இரக்கம் உறங்கிடுமோ — இன்னல்
இன்றள வும்தமிழ் மக்கள் உறுவதைப்
பெருக்க முனைபவரை — தட்டி
அடக்க வழியிலை அன்னார் மனத்தினில் (இரக்கம்)

மக்களைக் கொல்பவரை — இங்கு
மங்கையர் மானமே மாய்த்திடும் பேயரை,
தக்க வழிப்படுத்தார்் ்த — வல்ல
தரமுடை யாரவர் தம்மின் மனங்களில் (இரக்கம்)

விடுதலை வேட்கையினால் — தம்
வீடு மனைவி குழந்தைகள் விட்டவர்,
படுதுயர் பற்பலவாம் — கண்டும்
பாரில்கண் நீருகுக் காதோர் மனங்களில் (இரக்கம்)

தமைத்தாம் அரசுசெய்ய — எண்ணித்
தம்விதி தாமே நிறுவி நயம்பெற,
அமைத்தால் குறையிலையே — என்று
அம்புவிக் கேயறை கூவா அகங்களில் (இரக்கம்).

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s