பாலுக்குள் நெய் போலும Commentary continued

இறைவன் எவ்வுருவில் உள்ளான் என்ற கேள்வி கேட்கப்பட்டால், அதற்குப் பதில்: அவன் எவ்வுருவிலும் இல்லை என்பதுதான். உருவற்றவன் கடவுள். ஆயின் எவ்வுருவிலும் தோன்ற வல்லான். "எல்லாம் வல்லவன்" என்பதில் இருந்து அவனுக்கு இத்தகைய வல்லமையுண்டென்பது பெறப்படுமன்றோ? தமிழர் அவனைச் செவ்வுருவில் கொண்டனர், ஆதலின் சிவ > சிவத்தல்; சிவ+அன் = சிவன் ஆனான். செம்மை = நேர்மை ஆதலின், அவன் நேரியோன் என்பதும் பெறப்படும். அவன் ஓருருவில் பற்றாளனுக்கு காட்சி கொடுத்தனன் ஆயின், அது முகிழ்த்த உருவம் ஆகும். முகிழ்> முகிழ்த்து > முகிழ்த்தி > மூர்த்தி. (ஒப்பு: பகு(தி)> பாதி போல, முகி > மூ ஆயிற்று). அவற்கு உருவில்லை; அவன் பாலுக்குள் நெய் போலும் ஒளிந்துகொண்டிருக்கிறான். இதையே மாணிக்கவாசகர்: பிரைசேர் பாலில் நெய்போல் ஒளிந்துகொண்டிருக்கிறான் என்கிறார். பின்னும் பிறரும் இங்ஙனம் பாடுவர்.

இ·து இங்ஙனமாக, சைவ சமயத்தார், உருவ வழிபாடு செய்கின்றனர் என்பது அறியாது கடாவுதலாம்.

Advertisements
This entry was posted in poems I enjoyed. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s