திருவாசகம : முதுகாட்டு நடனம்

*

முதுகாட்டு நடனம்

நொந்திக் கிடந்த சுடலை தடவி
நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித்து இருந்த அங்கு உறங்கும் சிறுபேய்
சிரமப்படு காட்டின்
முந்தி அமரர் முழவின் ஓசை
முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல் கையேந்தி
அழகன் ஆடுமே
—திருவாசகம்


நொந்திக் கிடந்த = எரியூட்டப்பெற்றபின் அவிந்து கிடந்த;
சுடலை = பிணச் சாம்பலை.
தடவி = கிண்டிப் பார்த்து;
நுகரும் புழுக்கின்றி = அதில் உண்பதற்கு யாதுமின்றி;
சிந்தித்து இருந்த = (உண்ண ஒன்றுமில்லையே, யாது செய்வது என்று ) எண்ணமிட்டுக்கொண்டிருந்த;
அங்கு உறங்கும் சிறுபேய் = சுடுகாட்டில் வாழும் சிறியவகைப்பேய்;
சிரமப்படு காட்டின்= தொல்லைமிகப் படுகின்ற காட்டில்;
முந்தி அமரர் = முன்பு அமரர் ஆகிவிட்டவர்கள்; முழவின் ஓசை = (தோன்றிப்) பறை ஒலியெழுப்ப;
முறைமை வழுவாமே = உரிய முன்வரல் முறைகள் பிறழாமல்;
அந்தி நிருத்தம் = இறுதிக் கூத்தினை; அனல் கையேந்தி – தீ(ச் சட்டியினைக்) கையிலெடுத்துக் கொண்டு;
அழகன்= சிவபெருமான்; ஆடுமே = ஆடுவான்.

புழுங்கு
> புழுக்கு; இச்சொல் அம் விகுதி பெறவில்லை. ஒப்பிட்டால், உறங்கு >
உறக்கம் என்ற சொல் உறங்கு> (உறக்கு)> உறக்கம் என்று அம் விகுதி
பெற்றது. புழுங்குதலாவது, சமைத்தல்; சோறு புழுங்குதல் என்ற வழக்கையும்
புழுங்கல் அரிசி என்ற என்பதையும் காண்க. இப்பாடலில் புழுக்கு = உணவு.
இங்கு தீயில் புழுங்கி அவிந்த பிணத் தசை குறித்தது. சுடுகாட்டுப் பேய்கள்
பிணம் தின்னும் என்ற நம்பிக்கையை பிணக்கலைஞர்களும் அவர்களிடமிருந்து
பிறரும் அறிந்திருப்பர். புழுங்கு > புழுக்கம் என்பது காற்றின்மையால்
வெப்பமிகையைக் குறிக்கும் சொல்.

அமரர் பறை வாசிப்பர்; அதுவும்
பிணக் களத்தில் ஆடும் பெருமானுக்கு. பறையன் மட்டுமே அ·து வாசிப்பான்
என்பது தவறு. ஒன்று நம் கட்புலனுக்கு எட்டியது; மற்றது எட்டாதது ஆகும்.
அமரும் பறை வாசிப்பது கூறப்படுவதால், இக்காலக் கட்டத்தில் சார்தி முறைகள்
உருப்பெற்று இறுகிவிடவில்லை என்பதும் தெளிவாம். பறையறைதல் ஒரு தொழிலாகவே
இருந்ததெனலாம்.

சாத்திரங்களும் சுடுகாட்டை முதலிடமாகக் கொண்டே
தோன்றின. சா+ திறம் = சாத்திறம் > சாத்திரம் > சாஸ்திரம் என்றானது.
சங்கத மொழிவாணர் வேறு பிறப்பியலைக் காட்டி இதனை மறைப்பர். இதை நான் முன்பே
ஆய்ந்து கூறியுள்ளேன். ஒத்துக்கொள்ள அறிஞர் அஞ்சுவது இயற்கை.

Advertisements
This entry was posted in poems I enjoyed. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s