திருவாசகம : ” பாலின் நெய்போல”

அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே ஏசற்றேன்;
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியென்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ?
— திருவாசகம் 382.

என் உரை:

அரைசே = அரசே;  பொன்னம்பலத்தாடும் = தில்லையில் பொன் அவையிலே (கனகசபை) நடமிடுகின்ற;  அமுதே  என்றுன் அருள்நோக்கி=  அமிழ்தம் போன்றவனே என்று உன் அருளைப் போற்றி; இரைதேர் கொக்கொத்து = இரையைக் கண்டுபிடித்து உட்கொள்கின்ற கொக்கினை ஒப்ப;
இரவுபகல் = இரவும் பகலுமாய்;
ஏசற் றிருந்தே =(கிடைக்கும் என்று )  விரும்பி இருந்தே;  ஏசற்றேன் = துன்பமுற்றேன்;
கரைசேர் அடியார் = உன்பால் கொண்ட பற்றின் மிகுதியால் பயன்பெற்று  உனை அடைந்த  அடியவர்கள்;   களிசிறப்ப ் = மகிழ்வு எய்தும்படியாக (அவர்களுக்கு); காட்சிகொடுத்து= உன் உருவினைக் காட்டி; உன் அடியென்பால் =உன் அடியவன் ஆகிய என்னிடத்தில் (மட்டும்); பிரைசேர் பாலின் நெய்போல =பிரை ஊற்றிய பாலுக்குள் ஒளிந்திருக்கும் நெய்போல; பேசா திருந்தால்= (ஒளிந்துகொண்டு) எனை நீங்கி நின்றால்;  ஏசாரோ?= யான் தகுதியற்றவன் என்று உலகோர் எனை வையமாட்டாரோ. என்றபடி.
Please see commentary continued later.

Advertisements
This entry was posted in poems I enjoyed. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s