முன்னிசை முற்றும் தமிழிசை;

முன்னிசை முற்றும் தமிழிசை; மாறியது
பின்னிசை பேசின் கருநடமாம் — தென்னிசை
தன்னிசை என்றே தரம்கண்டு வாராய்நாம்
இன்னிசை கேட்போம் இனிது.

தானுரியத் தானுரியத் தன்னுள்ளே தானுமில்லை
வானுயர்ந்த இம்மெய் வணங்காதார் — நான்வதங்க
என்னை நறுக்கியே இட்டுக் கறிமணக்க
உண்ணுவார் ஏப்பமிடு வார்.

உரிக்க உரிக்கவே ஒன்றில்லை உள்ளே
மறுக்கொணா மெய்யுமா றாதே — கறிக்கே
நறுக்கி வதக்கியே நாமணக்க உண்ட
வெறிக்கேப்பம் விட்டார் விரைந்து.


யாப்பறிந்த வெங்காப் புலவரும் யாங்குற்றார்?
பாப்புனைந் திங்கே பதியாமல் — தீப்பொறிபோல்
வந்த விரைவில் வழியில் மறைந்துவிட்டார்
தந்தபா மேலொன்று தான்.

உங்களின் ஆக்கமென்னும் பாகத்தில் ஓய்ந்தனவோ
உங்கள் கவிதை ஒருதிங்கள் — வெங்காவே!
இங்குமே ஒன்றிரண்டாய் அங்குமே ஒன்றிரண்டாய்ப்
பொங்குக பாவின் புனல்.

அன்று புனைந்த அரிய பாடல்கள்
ஒன்றும் நினைவில் கொள்ளல் விட்டெவண்
சென்று வைகினிர் செந்த மிழ்க்கவி
இன்று வரைந்தவ ரிடர்க ளைகவே!

வேழ முகத்தான் விரிந்துயர் பேராற்றல்
ஆழக் கடலொக்கு மாம்.

இறைவா உலகம் இயக்குங்கால் நீயே
கரைவாழ் எளியோரைக் காணாய் — இரக்கமுடன்!
சாலமன் தீவதன் மேலலைகள் மோதியெழ
ஓலமிட்டே ஓய்ந்தார் உயிர்.

வேலை மலைபோல ஏலாத் தலைச்சுமையாய்க்
காலைபின் மாலை கடினமம்மா — நூலை
எடுக்கவும் நேரமில்லை என்றெதிர்க் காமல்
தொடுப்பீரே தோலாக் கவி.

எல்லார்க்கும் உண்டே இனிப்பில் பலசோலி
நல்லார்க்கோ இன்னுமிரு நாற்பங்கு — சொல்லாமல்
என்மூளைக் கெட்டுமே; யான்சொல்வ த:-தன்று;
தன்மூளைக் கொட்பம் தரல்.


குடியிருப்பில் குண்டு கொலையுண்ட மக்கள்;
படையிருப்பு நாவாய் அழிவாம் பகர்கின்றார்!
சிங்களவர் உண்மை சிதைத்தார் அதுகேட்ட
எங்களவர் ஏமாறார் காண்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

2 Responses to முன்னிசை முற்றும் தமிழிசை;

  1. nagaisbalamurali says:

    அன்பு சிவமாலா தங்கள் தமிழ் அருமையான படைப்புகளை வழங்குகிறது.மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.அன்புடன் பாலமுரளி.சிந்தனைக்கு வந்தவை

  2. B.I. says:

    மிக்க நன்றி பாலமுரளி அவர்களே! தாங்கள் தரும் ஊக்க உணர்விற்கு என் மனமார்ந்த நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s