சங்ககாலம்:

சங்ககாலம்:

"அந்தணர் நூுற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்." குறள் 543

செல்வி
சீ. காமாட்சி என்னும்்த ஆய்வாளர் (Selvi.Kamatchi Sinivasan,) " இங்கு
அச்சொல் (அந்தணர) பிரமாணரைக் குறிப்பதாகக் கொள்வதே பொருந்தும்." என்று
கருத்துரை வழங்கியுள்ளார். இ·து இவர்தம் சொந்தக் கருத்து. ஒரு
நூலைப்படித்துவிட்டு யாரும் கருத்துக்கூறலாம். மேலும் "அப்படிக் கொள்வதே
பொருந்தும்" என்று இவர் கூறினாரே தவிர அதற்கு அதுதான் பொருள் என்று
இறுதியுரையாகக் கூறவில்லை. மற்றும் "அந்தணர் நூல் என்பதும் வேதம் முதலிய
சமயநூல்களையே எனலாம்" என்று இவர் சொந்தக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையும் இறுதியாகவுக் அறுதியாகவும் கூறவில்லை. அவர்தம் நினைப்பின்
வெளிப்பாடாகவே கூறியிருக்கிறார். "இவ்வாறே பழைய உரையாசிரியர்கள் அனைவரும்
பொருள் கொண்டனர்." என்றார். உரையாசிரியர் இருந்த காலத்துக்கும் மூலம்
எழுதப்பட்ட காலத்துக்குமிடையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள்
உருண்டோடியுள்ளன. உரையாசிரியர் எழுதும்போது அவர் அருகில் வைத்திருந்த
சான்றுகள் யாவை என்றால், ஒன்றுமில்லை அருகிலிருந்த வீட்டுத் திண்ணைகள்
தவிர; அவர்கள் சொன்னதெல்லாம் அவர்கள் நினைப்பின் வெளிப்பாடேயாகும். எனவே
இதற்கு இதுதான் பொருள் என்று அடித்துக்கூறுவதற்குரிய — மறுதலிக்கவியலாத
சான்றுகள் யாதுமில்லை என்று இவற்றைத் தள்ளுபடி செய்வதே சரி.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் (குறள் 560)

ஆபயன் = பசுக்களின் பால். அறுதொழிலோர்: அந்தணர். இங்ஙனம் பரிமேலழகர் பொருள் கூறுவார்.

இதில்
ஆ+பயன் எனப் புணர்த்தினால் ஆப்பயன் என்று வலி மிகவேண்டும். அப்போது
பசுவின்பால் என்று பொருள் கொள்ளலாம். ஆபயன் என்றால் வினைத்தொகை என்று
கொண்டு ஆகும் பயன் என்று பொருள் படும். ஏன் வலி மிகவில்லை என்பதற்கு
இலக்கண அமைதி சிலர் கூறலாம். பரிமேலழகர ஆவாற்கொள்ளும் பயன் என்று மட்டும்
கூறினார்.

அறுதொழிலோர் என வள்ளுவர் குறிபிட்டது "பிரமாணர்களையே
யாதால் வேண்டும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல்
என்னும் ஆறு தொழில்கள் அவர்க்குரிய என்பது சங்க காலத்தில் முன்பே
வகுக்கப்பட்டது." என்று இவர் கூறியுள்ளார். மன்னவன் ஒழுங்காக
ஆட்சிபுரியவில்லை யென்றால், பிராமணர்கள் தங்கள் தொழிலைவிட்டுவிட்டு
வேறுவேலைகளுக்குப் போய்விடுவார்கள் என்று பொருள்கூறுவது கொஞ்சமும்
அறிவிற்குப் பொருந்தாத உரையாகும். ஒழுங்காக ஆட்சிபுரியாதவர் பலர்
இருந்தும் அப்படி எந்தப் பிராமணரும் வேறுவேலைகளுக்குப் போய்விடவில்லை,
மேலும் இந்த ஆறையும் தனித்தனித் தொழில்கள் என்று கூறுவதற்கில்லை.
இவையெல்லாம் மந்திரங்கள் சொல்லும்போது நடக்கும் ஒரு செயலின் பகுதிகளே
ஆகும், தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வது, (ஏற்றல்) பின்பு
இறையுணா (பிரசாதம்) திருநீறு (விபூதி ) வழங்குதல் முதலியவை வேட்டலின்போது
நடப்பவை; வேட்பிக்கும்போதும் நடப்பவை. இவை ஆறையும் தொழிலென்பது: ஒரு
தலைமயிரை எடுத்து அதைப் பகுக்க முயலும் நடவடிக்கையாகும்.

அறு
என்பதும் தொழில் என்பதும் பல பொருள்களையுடைய சொற்கள் ஆகும். இவ்வாறுள்ள
செயல்கள் பதிற்றுபத்தினுள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன என்றாலும் ஆங்கு அவை
ஆறு(6) தொழிலென்று விதந்து சொல்லப்படவில்லை.

ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் .. .. பதிற்றுபத்தது 24.

இவை ஒரு தொழிலின் ஆறு பிரிவுகளே.

ஓதுதல்
முதலானவற்றைச் செய்வோரெல்லாம் அந்தணர் என்று வைத்துக்கொண்டாலும்,
அந்தணர்தான் பிராமணர் என்று எப்படி ஊகம் செய்வது? சங்க காலத்தில் இவை
செய்யும் அந்தணராயிருந்தவர்கள் பல்வேறு குடியினர். ஒரே குடியினர்தான்
அந்தணராயினர் என்பதற்கு எந்தச் சான்றுமில்லை. இவர்கள் பெரும்பாலும்
நடுகற்களுக்குத் தொழுகை நடத்தியவரும் பிணங்கள் முதலானவற்றைக்
கையாண்டவர்களுமாவர். இதன்காரணமாக அவர்களுக்குத் தனித் தெரு
இருந்திருக்கலாம் என்று கொள்வதே மிக்கப் பொருத்தமுடைய கருத்துரை என்க.
அப்படியில்லை என்றால் ஏன் அவர்களுக்குத் தனித்தெரு? சங்க காலத்தில்
பிணக்கலைஞர் போற்றப்பட்டனர் என்பதே இலக்கியத்தின்வாயிலாக நாமறிந்துகொள்வது.

நிலம் பண்படுத்துதல்;
நடவு நடுதல்;
பயிர் வளர்த்தல்;
அறுவடை செய்தல்;
நென்மணிகளைச் சேமித்து வைத்தல்;
உலகுக்கு உணவூட்டுதல்.

இவ்வாறு
நடவடிக்கைகளில் அறுவடை செய்தல் யாவையும் ஒருவகையில் உள்ளடக்கியதே ஆகும்.
அறுவடை செய்தல் "அறுதொழில்" ஆகும். மன்னன் ஒழுங்காக ஆட்சி புரியாத
நாட்டில், உழவர் கற்றல், கற்பித்தல் முதலியவற்றைச் செய்ய இயலாது என்பதே
சரி.அவர்களின் நேரத்தைத் தம் பயிர்த்தொழிலைக் கள்ளர்களிடமிருந்தும்
பகைவரிடமிருந்தும் காத்துக்கொள்வதிலேதான் செலவிடவேண்டியிருக்கும்.

Selvi.Kamatchi Sinivasan, wrote following books

1. குறள் கூறும் சமுதாயம்
2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural)

மாமுது பார்ப்பான்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்கண் நோன்புஎன்னை.

இந்த சிலப்பதிகார வரிகளின் பொருள்:

மாமுது
பார்ப்பான் – மிகப்பழங்காலந்தொட்டு கோயில் காரியங்கள், குறிசொல்வது,
கணியம் பார்ப்பது, சவச்சடங்குகள் செய்வது முதலியவற்றைக் கவனித்துவந்த
பழங்குடியினரும் பிற வேலைக்காரர்களும். இவர்கள் தமிழர்கள். வடக்கிலிருந்தோ
வெளி நாடுகளிலிருந்தோ வந்தோரல்லர். (எந்தக் குடியினரும் இவ்வேலையில்
அமரலாம், சங்ககாலத்திலே. மணமுறைக் கட்டுப்பாடுகள் இல்லை. காதல்
திருமணங்கள் நடைபெற்றன.மணக்கொடைமுறை (வரதட்சிணை) இல்லை)

இது மாப்புதுப் பார்ப்பான் என்று வந்திருந்தால் புத்தேளிரைக் குறிக்கும், புதுப்பார்ப்பான் வெளியிலிருந்து
வந்து
பார்ப்பு வேலைகளில் அமர்ந்தவன். இவனை ஆரியன் என்றனர். உண்மையில் இவன் வட
நாட்டுத் திராவிடன். ஆரியன் என்று எவனுமில்லை என்கிறார்களே. இவர்கள்
தமிழருடன் (மணம்செய்தோ அ·து இன்றியோ) கலந்ததுடன் சிறிதுகாலம் கழித்து பிற
தமிழருடன் தொடர்ந்து மண உறவுகொள்வதைத் தவிர்த்துவிட்டனர் அல்லது
மற்றவர்கள் இவர்களைத் தவிர்த்துவிட்டனர்.

பிராமணர்

ஆதியில்
பிராமணர் என்று யாரும் இல்லை. குகை மாந்தனாய், பகையுடன் போராடி, பச்சூன்
உண்டு, பனியிலும் குளிரிலும் வாடிய நாகரிகமில்லாத காலத்தில் மதம் கடவுள்
முதலியன மனிதன் அறியான். இதனை மாந்தவளர்ச்சி நூலார்
தெளிவுபடுத்தியுள்ளனர். அப்போது பிராமணர் ஏது? பிறர் ஏது? இதே கருத்தை
வேறு விதமாகச் சொல்வதென்றால் அப்போது எல்லா மாந்தரும் பிராமணர்தாம்,
காரணம்: பிராமணர் என்று யாரும் உருவாகியிலர்.

பின்னர் கடவுளைப்
பற்றி மனிதன் சிந்திக்கத் தொடங்கினான். இவன் இப்படி ஏன் சிந்தித்தான்
என்றால், முதலாவது சாவினைப் பற்றிய அச்சம். இன்னும் சொல்வதென்றால் பிணி,
மூப்பு, சாக்காடு என்னும் இவைபற்றிய சிந்தனைத் தெளிவு அல்லது சிந்தனைக்
குழப்பம்! இவற்றினின்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவன் சிறுகச் சிறுகச்
சிந்தித்துப் படைத்ததுதான் அல்லது கண்டுபிடித்ததுதான் மதம் — கடவுள் என்பனவெல்லாம்.

கடவுளை
அறிந்துகொண்டவன், மந்திரம் அறியப் பன்னூறு ஆண்டுகள் ஓடியிருக்கும்:
இயக்கம் அமைக்கும் திறன் ஏற்பட்ட பிற்காலத்தில்தான் பிராமணர் ஏற்பட்டனர்.
முதன்முதலில் யார்வேண்டுமானாலும் பிராமணன் ஆகி மந்திரம் கூறிக்கொண்டு
அங்குமிங்கும் திரிந்து பிச்சை பெற்றுப் பிழைக்கலாம். இப்படிப் பட்டவர்களை
ஆங்கிலத்தில் nomads என்பர். கொள்வனை கொடுப்பனை பற்றிய விதிமுறைகள்
ஏற்பட்டு, அது திண்மை பெறப் பன்னூறு ஆண்டுகள் சென்றிருக்கவேண்டும். உடனே
கடவுள் எல்லா இயக்க விதிமுறைகளையும் படைத்தளித்தார் என்பது ஆராய்ச்சி
அறிவில்லாதவனின் உளறல் ஆகும்.

பிராமணர் என்ற சொல் தொல்காப்பிய
நூலில் இல்லை. எனவே அப்போது பிராமணர் யாரும் இல்லை. திருவள்ளுவர்
காலத்தில் புத்தேளிர் வந்தனர். பிராமணர் என்ற சொல் திருக்குறளிலும் இல்லை.
எனவே அப்போதும் பிராமணர் இல்லை. அந்தணர் என்போர் துறவிகள். நூலறிஞர்.
அந்தணர் என்ற சொல் வேதங்களில் உண்டா? தமிழில்மட்டும் உள்ளது.
யார்வேண்டுமானாலும் அந்தணர் ஆகலாம். ஏனெனில் அந்தண்மை என்பது மணமுறைகளால்
மூடப்பட்ட குமுக நிலையைக் குறிக்கவில்லை. அது ஒரு தனிமனித முயற்சியினால்
அடைந்த நிலையைக் குறித்தது என்று உணர்க!

Citing lines 42 -48

— சயம்கொண்டார் (நூல்: ஆதிநாதன் வளமடல்)

என
வேதவியாசன் பிறப்பைப் பாடியுள்ளனர். பரதவர் என்ற தமிழ்ச்சொல் மீனவரைக்
குறிப்பது. பரதன், பராசரன் முதலானோர் பெயர்களும் "பர" என்ற
முதலிரண்டெழுத்துக்களின் அப்பால் மீனவப் பின்புலத்தை
மறைத்துவைத்துக்கொண்டுள்ளது. எனவே வேதம் தொகுத்த வியாசன் பிராமணன் அல்லன்
என்பது தெளிவு. பிரமத்தை (இறைவனை) உணர்ந்தவனே பிராமணன் என்று
பொருள்கூறப்படுவதால், வேதவியாசன் உணர்வால் பிராமணன்; பிறப்பினாலான வகுப்பு
முறைகள் முன்பு ஏற்பட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மைக் காரணம் என்று
தெரிகின்றது. பிரமன் என்ற சொல்லும் பரமன் என்ற சொல்லின் திரிபு என்பர்.
பரமனை அணந்தவர் (பொருந்தி நிற்பவர்) பரமணர், இது பின் பிராமணர் என
வடபுலத்தே திரிந்தது.

ஊர் பார்ப்பான்

ஊரப்் பார்ப்பான் என்றொரு தொடர் தமிழிலக்கியத்தில் வருவதை நான் முன்னொரு திரியில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதனை இங்குக் காணலாம்.

uur paarppaan – kOyil paarppaan
—————————————

paarppaan means one who looks after (something) or (some place).

புறம்: 166. யாமும் செல்வோம்! பாடியவர்: ஆவூர் மூலங் கிழார். பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான்.் கௌணியன் விண்ணந்தாயன். திணை: வாகை. துறை: பார்பபன வாகை.

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்

…………………………….

From this stanza, (Puram 166) it is clear that the
word
“paarppaan” can also refer to “uurpaarppan”, a person who looks after a
village or region of several villages. The area referred to is
“puunjchARRuur”.: “onRu purintha iirirandin” refers to “aram, poruL,
inpam, viidu” the interplay of which is life. AaRu uNarntha oru
muthunuul refers to an old Tamil nuul which explained the way of life.
It may be an ethics book. Tamil language had many treatises and grammar
books which have been lost.

Advertisements
This entry was posted in Tamil Lit. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s