திரையினில் தோன்றிய தேன்குடமே

திரை

திரையினில் தோன்றிய தேன்குடமே — மாறித்
தீண்டத் தகாதவள் ஆகிடாமல்,
கறைதீர் கரைதனைச் சென்றடைந்தால் — புவிக்
கவிகளும் பாடிடும் தேன்நிலவாம்.

பலரும் தொடுமொரு பஞ்சணையாய் — வந்து
பார்ப்போர் பருகிடும் கள்ளனையாள்,
ஒருவன் பிடிக்குள் மணம்பெறுவாள் — எனில்
உயர்கவி பாடும் ஒளிநிலவாம்.

பிறனறி யானென எண்ணியவள் — ஒரு
பிழைபடும் பாதையில் சென்றவளே,
அறமது போற்றிடும் இவ்வுலகம் — இகழ்ந்து
அண்டவொண் ணாத இருள்நிலவாம்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s