சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் — நாடிநீ
வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.

— உய்யக்கொண்டார் பாடல்.

மேல் தரப்பட்டுள்ள பாடலின் பொருள்:

சூடி = பூக்களையணிந்து; கொடுத்த = பின் அவற்றை இறைவனுக்கு அணிவித்த; சுடர்க்கொடியே = மனத்தாலும் உடலாலும் எழுச்சிபெற்ற கொடிபோலும் பெண்ணே; தொல்பாவை = மிக்கப் பழங்காலத்திலிருந்து போற்றப்பட்டுவரும் பாவையென்னும் பா வகையை;
பாடி அருளவல்ல = புனைந்திசைத்துத் தந்தருளும் வல்லமையுடைய; பல்வளையாய் = பலவகைப்பட்ட வளையல்களையுடையாய்; நாடி நீ = நீங்கள் நன்கு எண்ணமிட்டு; வேங்கடவற்கு = திருவேங்கடத்தானுக்கு; என்னை விதியென்ற = அடியேனை நேர்படுத்தவேண்டுமென்கின்ற; இம்மாற்றம் = இவ்வுயரிய வேறுபாட்டினை; நாம் கடவா வண்ணமே = நாம் ஒருபோதும் மாற்றியமைக்காத வண்ணமாக; நல்கு = அருள்புரிவாயாக என்றபடி.

Advertisements
This entry was posted in Tamil Lit. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s