மணிப்புறா

மணிப்பு றாவிற்குக் கண்ணிவைத்தேன்! – நீ

மாடப் புறாவந்து மாட்டிக்கொண்டாய்;

தனிப்ப யன்யொன்றும் இல்லைஇல்லை — போ!போ!

தாவிப் பறந்து பிழைத்துப்போவாய்!!

இட்டிலி வேண்டுமென் றங்குசென்றால் — என்

தட்டினில் வந்தது தோசைஎன்றால்,

கொட்டி வயிறு நிரப்பவந்தார் — பால்

கொடுத்துவிட் டோட்டமெ டுத்துவிட்டேன்!

எழுதுமென் ஓலை ஒருத்தனுக்கு — பதில்

இன்னொரு வன்சொல் பொருத்தமன்றே!!

பழுதிலை வேறு திசைபறந்தேன் — இதில்

அழுதவன் பாவம் அசைவுழந்தான்.

ஒன்றை விழைந்திடில் இன்னொருகை — வரல்

ஞாலத் தியற்கை எனப்படுமோ?

அன்றே அலர்ந்தசெந் தாமரையே – நீ

அன்புட நேஎனக் குண்மைசொல்வாய்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s