சன்னல். சாளரம்

சன்னல் சாளரம் ்

சன்னல் என்பது துளை என்று பொருள்படும் சொல். (சல் >) சன். இதன் அடிவேர்ச் சுல். அது திரிந்து பல சொற்கள் ஏற்பட்டன எனக்கூறுவர்.

சுல் > சுர் > சுரி = துளை.
சுல்>சூல்>சூன்றல்= தோண்டுதல்.
சுல் > சூல் = கருப்பம். (கருப்பை உள்ளீடு).
சுல் > சூலுதல் = கருக்கொள்ளுதல்.
சுல் > சல். (உகர அகரத் திரிபு).
சல்- சல்லடை (பல துளைச் சலிக்கும் கருவி).
சல்> சில்> சில்லி, சில்லை.= துளை. (அகர உகரத் திரிபு).
சல்>செல், =மரமுதலியவற்றில் துளையிடும் வெள்ளை ஊருயிரி. (ஊரும் உயிரி).( அகர எகரத் திரிபு.)

சல் > சன். (ல் >ன்) cf: திறல் > திறன்.
சன்+து
> சந்து. (ன்+ து = ந்து என்பதை மன்+திரம் = மந்திரம், தன்+திரம் =
தந்திரம் முதலிய பல சொல்லாக்கங்களில் காணலாம். ) திறம்(சொல்) > திரம்
(பின்னொட்டு). சந்து = வழி. துளைபோன்ற வழி முதலியனவை.
சன் > சன்னல். (சுவரில் காற்று உள்வரச் செய்யப்பட்ட துளை அல்லது வழி).

சல்>சாள்.

சாளரம் = சன்னல். அரம் ஒரு பின்னொட்டு.

சாளரம் – சுவர்க் காற்றுத் துளை அல்லது வழி.

இங்ஙனம் சன்னல் என்பது தமிழின் சல் அடிவேருடன் தொடர்புபட்ட ஒரு சொல். இதை ஆய்ந்துள்ளனர் அறிஞர்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s