கலாநிதி பாலசிங்கனாருக்கு அஞ்சலி

கலாநிதி பாலசிங்கனாருக்கு அஞ்சலி.

இன்பத்தமிழருக்கே — ஓர்
இல்லம் இருந்திட ஈழம் விழைந்தனை!

துன்பம் பலதுளைத்தும் — யாம்
தோற்பதில் லைவர லாற்றிலென் றோங்கியே

மன்பதை உய்கவென — காலை
மாலை இரவெனப் பாரா துழைத்திட்ட

முன்புல வீரனென்றால் — பால
சிங்கனன்றி வேறு தங்கமுண்டோ சொல்க ! (இன்பத்)

2
தள்ளா அகவையிலும் — ஆய்ந்து
தந்த உரைகளும் ஒன்றிரண் டல்லவே,

முள்ளாய் முளைத்துவிட்ட — பகை
மூடரின் வாதங்கள் மூளி படச்செய்தான்!

எல்லாத் தமிழருமே — தமிழ்
இன்ப நிலவென அன்புடன் போற்றிய

சொல்லின் உயர்செல்வனின் — உயிர்
சோர்ந்தது வோஉடல் வீழ்ந்தது வோ அட! (இன்பத்)

3

இன்னும் சிலகாலமே — நீ
இங்கிருந் தேதுணைப் பங்கினை ஆற்றிடப்

பொன்னுயிர் தாங்கி நிற்க — ஒரு
புண்ணியம் யாங்களும் செய்தில மோ?பலர்,

தம்முயிர் தந்துனையே — காக்கும்
தக்க வலிமையும் மிக்கவர் என்பதைக்

கண்ணில் மறைத்துவிட்டு — அந்தக்
காலனும் உன்னையே நண்ணிய தென்னவோ (இன்பத்)

4

நெஞ்சில் வலிவிளைத்து –ஞாலம்
நீங்கத் துணிந்தது தாங்கொணாத் துன்பமே,

எஞ்சுமிப் பூவுலகில் — இனி
எங்குனக் கோரிணை நன்கினிக் காண்பது?

செஞ்சொலா லோசனைகள் — பெற்ற
சீருடைத் தோழர்கள் யாரிடம் போவது?

தஞ்சமெனுந் தெய்வமே — எமைத்
தாங்கி அருள்புரி ஏங்குகண் ணீர் அற — (இன்பத்)

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s