இதுதானே வையம்?

உனைநத்தி வந்தொருத்தி உடன் தங்கி விட்டால்
உதவுவது மன்பதைபால் நீகாட்டும் நேயம்;
உனைஎத்தி வாழ்வதையே அங்கன்னாள்் செய்தால்
ஒருக்கால்போல் எக்காலும் ஒத்துக்கொள் வாயோ?
எனைவிட்டு நீசெல்வாய் என்றவட்குச் சொன்னால்
இதுகாறும் பெற்றதெலாம் எண்ணாமல் சொல்வாள்:
“உனைவிட்டேனா பார!”் என் றொன்னார்பால் சென்று
உனக்கின்னல் செய்திடுவாள் இதுதானே வையம்?

நன்றிபல செய்தாலும் அன்று மறக்கும்
நயந்ததனை நீக்கிவிடில் நின்று குரைக்கும்
வென்று ௪¢ல நீபெற்றால் வீழ்த்த நினைக்கும்
வீழ்த்துவிடில் நெஞ்சுவந்து தாழ்த்தி நகைக்கும்;
ஒன்றுநலம் நீபெறவும் ஒவ்வா திருக்கும்
உள்ளத்தைக் கொண்டவர்கள் ஊத்தை உகக்கும்
பன்றிகளைப் போல்வாரே பல்கிச் ௪¢றக்கும்
பாரிதனைக் காண்கையிலே மார்பு துடிக்கும்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s